காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இன்று மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.. விரைவில் சட்டப்பேரவை தேர்தல்?

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இன்று மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.. விரைவில் சட்டப்பேரவை தேர்தல்?

ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் என தகவல்.

ஜம்மு காஷ்மீரில் நிலவும் நிலைமை மற்றும் அந்த யூனியன் பிரதேசத்திற்கான எதிர்கால நடவடிக்கை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி மற்றும் ஜம்மு அண்டு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இன்று மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.. விரைவில் சட்டப்பேரவை தேர்தல்?
காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள்

மத்திய அரசின் அழைப்பை ஏற்று முன்னாள் முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் 14 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று டெல்லி வந்தடைந்தனர். இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கின்றனர். 2018ல் மெகபூபா முப்தி அரசாங்கம் கவிழ்ந்த பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லை. தற்போது அங்கு அமைதி நிலவுவதால், அரசியல் நடைமுறைகளை அங்கு பலப்படுத்துவது தொடர்பாக இன்று நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இன்று மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.. விரைவில் சட்டப்பேரவை தேர்தல்?
தேர்தல்

மேலும், ஜம்மு அண்டு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது குறித்து இந்த முக்கியமாக விவாதிக்கபடும். மேலும் காஷ்மீரின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய வெளிப்புற காரணிகளான ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறுதல், லடாக் எல்லையில் சீனா இராணுவத்தின் ஊடுருவல் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.