ரஜினிக்கு ஸ்பெஷலாக ‘நன்றி’சொன்ன பிரதமர் மோடி…

 

ரஜினிக்கு ஸ்பெஷலாக ‘நன்றி’சொன்ன பிரதமர் மோடி…

பிறந்தநாளுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்ததையடுத்து அவருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மோடியின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மோடியின் சாதனைகள் தொடர பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில், “மதிப்பிற்குரிய மோடி அவர்களே, சவாலான இந்நேரத்தில் சவாலான மனிதரான உங்களுக்கு மேலும் வலிமை கிடைக்க வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி நன்றி ரஜினிகாந்த் ஜி என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.