“ஒரு காலத்தில் பாஜகவில் 2 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்” மோடி உருக்கம்

 

“ஒரு காலத்தில் பாஜகவில் 2 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்” மோடி உருக்கம்

நடந்துமுடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக -ஜேடியு கூட்டணி 125 இடங்களில் வெற்றிப்பெற்றது ஆட்சியை கைப்பற்றியது. அதேபோல் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 5 தொகுதிகளில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வெற்றி பெற்றது. இந்த சூழலில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். பீகார் தேர்தல் வெற்றியை அடுத்து பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பீகார் தேர்தலில் இத்தகைய வெற்றியை கொடுத்தது மக்களுக்கு நன்றி. கொரோனா காலத்தில் தேர்தலை நடத்தி, உலகத்துக்கே இந்தியா தன்னுடைய சக்தியை காட்டியுள்ளது. அமைதியாக தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையம் மற்றும் பாதுகாப்பு வீர‌ர்களுக்கு வாழ்த்துக்கள். வளர்ச்சிப் பாதையில் நாட்டை கொண்டு செல்லும் தீர்மானத்தை மக்கள் எடுத்துள்ளனர்.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வேலை செய்யுங்கள். நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொள்ளாதவர்களுக்கு, தேர்தலில் வாக்குகள் சரிந்துள்ளது

“ஒரு காலத்தில் பாஜகவில் 2 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்” மோடி உருக்கம்

ஒரு காலத்தில் பாரதிய ஜனதாவுக்கு இரண்டு அறைகளுடன் 2 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். தற்போது தேசம் முழுவதும் விரிந்து ஒவ்வொருவரின் இதயத்தையும் பாஜக வென்று வருகிறது. காங்கிரஸ் ஒரு குடும்பத்திற்கான கட்சி. ஜனநாயகத்தில் வாரிசு அரசியலுக்கு ஒருபோதும் இடமில்லை” எனக்கூறினார்.