கொரோனா பரவல் தீவிரம்… பொதுக் கூட்டத்துக்கு கூடிய மக்களை பாராட்டிய மோடி…

 

கொரோனா பரவல் தீவிரம்… பொதுக் கூட்டத்துக்கு கூடிய மக்களை பாராட்டிய மோடி…

மேற்கு வங்கத்தில் தனது பொதுக் கூட்டத்துக்கு கூடிய மக்களை பிரதமர் மோடி பாராட்டியது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நம் நாடு கொடிய கொரோனா வைரஸின் இரண்டாவது அலையுடன் போராடி கொண்டு இருக்கும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பேரணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபடுவதை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. ஆனால் அதைப்பற்றி எல்லாம் பிரதமர் மோடி கண்டு கொள்வதாக தெரியவில்லை.

கொரோனா பரவல் தீவிரம்… பொதுக் கூட்டத்துக்கு கூடிய மக்களை பாராட்டிய மோடி…
பா.ஜ.க.

மேற்கு வங்கம் அசான்சோலில் பா.ஜ.க. சார்பில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் மோடி பேசுகையில் கூறியதாவது: கடந்த மக்களவை தேர்தலின்போது நான் இங்கு இரண்டு முறை வந்தேன். கடைசியாக நான் பாபுல்ஜிக்கு (அசான்சோல் எம்.பி.யாக இருக்கும் மத்தியமைச்சர் பாபுல் சுப்ரியோ) வாக்கு கேட்க வந்தேன். முதல் முறையாக எனக்காக இங்கு வந்தபோது இந்த கூட்டத்தின் கால் பகுதி அளவுக்கே கூட்டம் இருந்தது.

கொரோனா பரவல் தீவிரம்… பொதுக் கூட்டத்துக்கு கூடிய மக்களை பாராட்டிய மோடி…
அசான்சோல் பொதுக்கூட்டத்தில் கூடிய மக்களின் ஒரு பகுதியினர்


ஆனால் இன்று எல்லா திசைகளிலும் நான் ஏராளமான மக்களை காண்கிறேன். இது போன்ற பேரணியை முதன்முறையாக கண்டிருக்கிறேன். இன்று நீங்கள் உங்கள் சக்தியை காட்டியுள்ளீர்கள். அடுத்த கட்டம் மிக முக்கியமானது. வாக்களிக்க செல்லுங்கள் மற்றவர்களையும் வாக்களிக்க அழைத்து செல்லுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். கொரோனா வைரஸை பரவலை தவிர்க்க சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் வலியுறுத்தி வரும் வேளையில், கூட்டத்துக்கு அதிகளவில் மக்கள் வந்ததை பிரதமர் மோடி பாராட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.