Home இந்தியா "கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்" : பிரதமர் மோடி பேச்சு!

“கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்” : பிரதமர் மோடி பேச்சு!

இந்த விழாவின் போது குறைந்த அளவில் விருந்தினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்

 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லிகாரணமாக  செங்கோட்டையில் பிரதமர் மோடி 7வது முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்.  முன்னதாக அவர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் முப்படைகளின் மரியாதையை ஏற்றார்.  இந்த விழாவின் போது குறைந்த அளவில் விருந்தினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். விழா முழுவதும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் 74 வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நம் நாடு சுதந்திரம் அடைய தங்களுடைய உயிரை தியாகம் செய்தவர்களுக்கு மனப்பூர்வ நன்றி. கொரோனாவுக்கு  எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி.  கொரோனா தடுப்பு பணியில் மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். கொரோனாக்கு எதிரான போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம். விரைவில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை நாம் மறந்துவிடக்கூடாது.நாட்டில் பல்வேறு இடங்களிலும் மழை, நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் போர்க்களமாக உள்ளது.

கொரோனா காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் குழந்தைகளை காணமுடியவில்லை. இந்தியாவை தொடர்ந்து ஆளலாம் என நினைத்த ஆங்கிலேயர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  ஆங்கிலேயர்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டனர். தியாகம் செய்தவருக்கு இந்தியர்கள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்.நாடு தன்னிறைவு பெறுவது ஒவ்வொரு இந்தியரின் தாரகமந்திரம். சுயசார்பு இந்தியாவை நோக்கி நாடு முன்னேறி கொண்டிருக்கிறது.  பல மொழிகள், பல பிராந்தியங்கள் இருந்தாலும் ஒற்றுமையாக போராடியதால் சுதந்திரம் பெற முடிந்தது” என்று கூறிய அவர் “நாட்டின் 75வது சுதந்திர தின விழா மிக பிரம்மாண்டமாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இளைஞர்கள் 20 வயது ஆனாலே சொந்தக் காலில் நிற்க வேண்டும் என பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள்.  நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்தியா சொந்த காலில் நிற்க வேண்டும். நமது தன்னம்பிக்கையே நாடு முன்னேறுவதற்கான வழி. உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு அதிகரிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

Most Popular

தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை கேட்டு மார்ட்டின் நிறுவன காசாளரின் மகன் ஆட்சியரிடம் மனு

பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நிவாரணத்தொகை கேட்டு மார்ட்டின் நிறுவன காசாளரின் மகன், மனைவி ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

காரைக்கால்- அச்சம் அகன்று மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு அதிகரிப்பு!

காரைக்காலில் கொரோனா அச்சமின்றி விழுப்புணர்வுடன் மக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்கின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதே வேளையில் புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்து...

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓட்டம்

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நபர் தப்பியோடிவிட்ட செய்தி சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மல்லூர் அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் கைது...

அஸ்வின் காயம்… ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுகிறாரா? #IPL #Ashwin

ஐபிஎல் திருவிழா தொடங்கி உற்சாகமாகப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்று நடந்த நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும்...
Do NOT follow this link or you will be banned from the site!