வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை- பிரதமர் மோடி

 

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை- பிரதமர் மோடி

வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி, காசி விஸ்வநாதர் ஆலய பூஜை – பிரதமர் மோடி பங்கேற்றார். காசி விஸ்வநாதருக்கு பிரதமரே நேரடியாக பூஜை செய்தார். தொடர்ந்து விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபாதை பிரதமர் மோடி பணிகளை ஆய்வு செய்தார்.

இதனையடுத்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை. இடைத்தரகர்களிடம் இருந்து விவசாயிகளைப் பாதுகாத்து, விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கச் செய்வதே நோக்கம். வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளை எதிர்க்கட்சிகள் திசை திருப்பி வருகின்றன” எனக் கூறினார்.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை- பிரதமர் மோடி

முன்னதாக வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகளின் போராட்டங்கள் 5ஆவது நாளாக தொடருகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வியாழக்கிழமை முதல் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தொடர்ந்து 5ஆவது நாளாக புராரியில் உள்ள நிரான்காரி மைதானத்தில் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்கின்றனர். போராட்டத்தை கைவிடும் படி கேட்டுக் கொண்ட மத்திய வேளாண்துறை அமைச்சர் வரும் 3ம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.