“மத்திய அமைச்சரவை விரிவாக்கம்”…. பிரதமர்-அமைச்சர்கள் இடையேயான கூட்டம் திடீர் ரத்து!

 

“மத்திய அமைச்சரவை விரிவாக்கம்”…. பிரதமர்-அமைச்சர்கள் இடையேயான கூட்டம் திடீர் ரத்து!

பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சில நாட்களாகவே மிக முக்கியமான ஆலோசனையில் இருக்கின்றனர். அமைச்சரவை விரிவாக்கம் தான் அது. 2019ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசு அமைச்சரவையை மாற்றாமலும் விரிவாக்கம் செய்யாமலும் இருந்து வருகிறது. இதற்கு நடுவே ராம் விலாஸ் பஸ்வான், சுரேஷ் அங்காடி ஆகிய இரு அமைச்சர்கள் மறைந்தனர். பாஜக அல்லாத கட்சிகளைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் பதவி விலகினர். தற்போது அமைச்சரவையின் பலம் 53ஆக உள்ளது. 81 அமைச்சர்கள் வரை அமைச்சரவையில் இடம்பெறலாம். அதில் 28 பதவிகள் காலியாக உள்ளன.

“மத்திய அமைச்சரவை விரிவாக்கம்”…. பிரதமர்-அமைச்சர்கள் இடையேயான கூட்டம் திடீர் ரத்து!

இதை நிரப்புவதற்காகவே பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். இந்த ஆலோசனையில் அமித் ஷா மட்டுமில்லாமல் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய பெரிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணமான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

“மத்திய அமைச்சரவை விரிவாக்கம்”…. பிரதமர்-அமைச்சர்கள் இடையேயான கூட்டம் திடீர் ரத்து!

இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று பிரதமர் இல்லத்தில் நடைபெறுவதாக இருந்தது. அமித் ஷா, நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான், ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் பிரதமர் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்தக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை. இச்சூழலில் மத்திய சமூக நீதித்துறை அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட்டை கர்நாடக ஆளுநராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இது அமைச்சரவை மாற்றத்திற்கான மறைமுக செய்தி என்று கூறப்படுகிறது.