தமிழ் மொழியை கற்க ஆசை; ஆனால்.. பிரதமர் மோடி உருக்கம்!

 

தமிழ் மொழியை கற்க ஆசை; ஆனால்.. பிரதமர் மோடி உருக்கம்!

தமிழ் மொழியை கற்க வேண்டும் என்ற தனது முயற்சி வெற்றி பெறவில்லை என பிரதமர் மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியில் உருக்கமாக பேசினார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணிக்கு ‘மன் கீ பாத்’ என்னும் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் உரையாற்றுவது வழக்கம். பிரதமராக அவர் பதவியேற்ற நாளில் இருந்து எல்லா மாதங்களும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 74 ஆவது முறையாக மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

தமிழ் மொழியை கற்க ஆசை; ஆனால்.. பிரதமர் மோடி உருக்கம்!

அதில் பேசிய அவர், மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அடுத்த 4 மாதங்களுக்கு நீரை சேமிக்கும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். நீர் நிலைகளை தூய்மைப்படுத்தி பாதுகாக்க வேண்டும். இன்று தேசிய அறிவியல் தினம். நம் நாட்டின் விஞ்ஞானிகள் பற்றி இளைஞர்கள் படிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு அறிவியலின் பங்களிப்பு அதிகம் என்று கூறினார்.

தமிழ் மொழியை கற்க ஆசை; ஆனால்.. பிரதமர் மோடி உருக்கம்!

தொடர்ந்து தமிழ் மிகவும் தொன்மையானது, அதன் கலாச்சாரங்கள் புகழ் பெற்றது என்று கூறிய பிரதமர் மோடி, தமிழை கற்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என உருக்கமாக பேசினார். மேலும், தமிழ் இலக்கியங்கள் உன்னதமானது என்றும் தமிழ் தொன்மையான மொழி என்றும் அவர் தெரிவித்தார். தமிழ் மீது தான் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசியிருக்கும் பிரதமர் மோடி, தனது பெரும்பாலான உரைகளில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.