என்னா ஒரு கெத்து! பிரதமராவது **** வது… வைரலாகும் மம்தாவின் புகைப்படம்

மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட ஒடிசா மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்றடைந்துள்ளார். ஆளுநர் மற்றும் முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் இணைந்து மோடி பார்வையிடுகிறார். மேற்குவங்கம், ஒடிசாவில் அம்பன் புயல் கடும்சேதத்தை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். பிரதமர் மோடி எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அந்த மாநிலத்தின் முதல்வர்கள் தகுந்த மரியாதை அளிப்பார்கள். ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை கண்டுக்கொள்ளாமல் அவமரியாதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, மேற்கு வங்க கவர்னர் மற்றும் முதல்வர் வரவேற்க தயாராக நின்றனர். விமானத்தில் இருந்து பிரதமர் இறங்கி வரும்போது கவர்னர் தகுந்த மரியாதை அளித்தனர். ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜியோ கையில் செய்தித்தாளை வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருப்பது போல் நின்று இருந்தார். மற்றொரு புகைப்படத்தில் பிரதமர் மோடி மம்தாவிற்கு வணக்கம் வைக்கிறார் ஆனால் மம்தாவோ அதனை கண்டுக்கொள்ளாமல் வணக்கம் வைக்காமல் அசால்ட்டாக நின்றுக்கொண்டிருக்கிறார். இந்த புகைப்படங்களில் இருந்து பிரதமரை மம்தா அவமதித்தது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஏற்கனவே பாஜகவை வசைப்பாடுவதையும், பாஜகவின் கொள்கையையும் எதிர்ப்பதிலும் மம்தா முதல் ஆளாக இருப்பார் என்பது குறிப்பிடதக்கது.

- Advertisment -

Most Popular

நடக்க முடியாத மகளை கையில் தூக்கி சென்ற தந்தை : அரசு மருத்துவமனையின் அலட்சியம்!?

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக நேற்று சேலம் அரசு மருத்துவமனைக்கு மகளை செல்வம் அழைத்து வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்த நிலையில் சிறுமியால் நடக்கமுடியவில்லை எனத்...

நல்லவன் போல பழகி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்.. போக்சோவில் கைது!

நாமக்கல் அடுத்த பாப்பிநாயக்கன் பட்டியில் உள்ள கோழி பண்ணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இங்கு கடந்த ஒரு...

கொரோனா பாதிப்பு: இதுவரை 3 லட்சத்து 61ஆயிரத்து 996 பேர் பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் 59...

உலகளவில் கொரோனா தொற்று 59 லட்சத்தை தாண்டியது…!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை...