சென்னை-போர்ட்பிளேர் இடையே பைபர் ஆப்டிக் கேபிள் திட்டம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

 

சென்னை-போர்ட்பிளேர் இடையே பைபர் ஆப்டிக் கேபிள் திட்டம் :  பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

சென்னையையும் அந்தமான் போர்ட் பிளேரையும் கடல் வழியாக இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டம் இன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்படுகிறது.

சென்னை-போர்ட்பிளேர் இடையே பைபர் ஆப்டிக் கேபிள் திட்டம் :  பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

இந்த நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு போர்ட் பிளேயரில் வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் கீழ் 2,300 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,224 கோடியில் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நாட்டின் பிற பகுதிகளைப்போன்று செல்போன், லேண்ட்லைன் தொலைபேசி சேவைகள் கிடைக்கும் என்றும் இந்த கேபிள், சென்னை-போர்ட் பிளேர் -சுவராஜ் தீவு-லிட்டில் அந்தமான்-கார்நிக்கோபார்- கமோர்ட்டா-கிரேட் நிக்கோபார்- லாங் தீவு- ரங்கத் தீவுகளை இணைக்கிறது.

இந்நிலையில் சென்னை-போர்ட்பிளேர் இடையே கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை இன்று டெல்லியில் இருந்தவாறு பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக துவங்கி வைக்கிறார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் சென்னைக்கும் போர்ட் பிளேருக்கும் இடையேயான பைபர் ஆப்டிக் கேபிள் திட்டத்தை இன்று காலை‌ 10:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ள நிலையில் அந்தமான் நிக்கோபார் தீவு மக்களுக்கு இந்நாள் ஒரு சிறப்பான நாள் என தெரிவித்துள்ளார்.