“ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவை” : பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் !

“ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவை” : பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் !

டெல்லியில் தேசிய பொது பயண அட்டையின் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

“ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவை” : பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் !

தேசிய பொது பயண அட்டையின் சேவையை டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கு வைக்கிறார். அட்டையைக் கொண்டு விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் மெட்ரோ ரயிலின் எக்ஸ்பிரஸ் சேவையைப் பயன்படுத்தலாம். அதேபோல் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை மூலம் பிற மார்க்க மெட்ரோ ரயில்களிலும் பயணிகள் பயணிக்கலாம் என்றும் வாகன நிறுத்த கட்டணம், மெட்ரோ ரயில் நிலைய கடைகளில் பொருள்களை வாங்கவும் பொது அட்டையைப் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவை” : பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் !

அதேபோல் நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் இன்று ஆரம்பித்து வைக்கிறார். முதற்கட்டமாக கட்டமைக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே இந்த தானியங்கி ரயில் சேவை இயக்கப்பட உள்ளது இதனை தொழில்நுட்ப குழுவை சேர்ந்த வல்லுநர்கள் , கமாண்ட் சென்டர் என்ற அறையில் இருந்து ரயில் புறப்படும் நேரம், எப்போது நிற்க வேண்டும் , அதன் வேகம் என்ன? என பலவற்றையும் தீர்மானிப்பார்கள். அதேபோல் நவீன சிக்னல் இருக்கும் வழித்தடங்களில் மட்டுமே இந்த ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.