darbar
  • January
    21
    Tuesday

Main Area

Main



நடிகர் விவேக்-கிற்கு நன்றி தெரிவித்த மோடி: காரணம் தெரியுமா?

மோடி- விவேக்
மோடி- விவேக்

மாமல்லபுரம் தொடர்பான கவிதை ஒன்றை  எழுதிய பிரதமர் மோடிக்கு நடிகர் விவேக் நன்றி கூறியுள்ளார். 

modi

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் கடந்த 11 மற்றும் 12ஆம் தேதிகளில்  இந்திய பிரதமர்  நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது மாமல்லபுர சிற்பங்கள் மற்றும் கலைவடிவங்களைக் கண்டுகளித்தனர். இந்த நிகழ்வின் போது  மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி  சட்டை அணிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.  இதனிடையே மாமல்லபுரம் தொடர்பான கவிதை ஒன்றை பிரதமர் எழுதியுள்ளார். இதையடுத்து  மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், கவிதைக்கான  தமிழ் மொழி பெயர்ப்பை  பதிவிட்டிருந்தார்.

modi

இந்நிலையில்  நடிகர் விவேக் பிரதமரை பாராட்டி வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில், 'இயற்கையை மதிப்பது கடவுளை மதிப்பதற்கு சமமானது. நீங்கள் மாமல்லபுரம் தொடர்பாக எழுதிய கவிதைக்கு நன்றி' என்று பதிவிட்டிருந்தார். விவேக்கின் இந்த பாராட்டுக்குப் பதிலளித்த மோடி, யற்கையை மதிப்பது நமது கலாச்சாரத்தில் ஒன்று. மாமல்லபுரத்தின் அழகிய கடல் மற்றும் அங்கு நிலவிய அமைதியான சூழல் எனது எண்ணங்களைப் பிரதிபலிக்க மிகவும் உதவியாக இருந்தது. நன்றி விவேக்' என்று பதிலளித்து வியப்பை ஏற்படுத்தினார்.

modi

இதேபோல் பிரதமருக்கு வாழ்த்து கூறிய தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கும் மோடி டிவிட்டரில் நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

2018 TopTamilNews. All rights reserved.