தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர்!

 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர்!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,807 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,714 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 84,598 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் மூலம் பாதிப்பு அதிகமாக இருந்த சென்னையில் தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர்!

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்துள்ளார். அப்போது முதல்வர், தமிழகத்தில் ஒரு நாளைக்கு 48,000 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுவதாகவும் கொரோனாவை கட்டுப்படுத்த முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நாட்டிலேயே அதிகஅளவு தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை நடைபெறுவதாகவும் பிரதமரிடம் கூறியிருக்கிறார்.