இந்தியாவில் நகரங்களைவிட கிராமங்களிலேயே இணைய பயன்பாட்டாளர்கள் அதிகம்- பிரதமர் மோடி

 

இந்தியாவில் நகரங்களைவிட கிராமங்களிலேயே இணைய பயன்பாட்டாளர்கள் அதிகம்- பிரதமர் மோடி

அமெரிக்க – இந்திய வர்த்தக கவுன்சில் உருவாக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த கவுன்சில் சார்பாக இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள் சிறப்பான வருங்காலத்தை கட்டமைத்தல் என்பதாகும். இதில் இந்திய, அமெரிக்க அரசுகளின் கொள்கை வகுப்பாளர்கள், உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் வர்த்தக, சமூக துறைகளின் கருத்தாளர்கள், தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தியாவில் நகரங்களைவிட கிராமங்களிலேயே இணைய பயன்பாட்டாளர்கள் அதிகம்- பிரதமர் மோடி

ஐடியாஸில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க ஒருங்கிணந்த முயற்சிகள் அவசியம். சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியா உலகிற்கு பெரிய வழிகாட்டுதலை ஏற்படுத்தித் தந்துள்ளது. வாய்ப்புகள் அதிகம் நிறைந்த நாடாக இந்தியா மிளிர்ந்து வருகிறது. இந்தியாவில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் இணையதளத்தை பயன்ப்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் தொழில் சிறப்பாக வளரப்போகிறது. இந்தியாவின் விவசாயத்துறை சிறப்பான வளர்ச்சியடையும் காலகட்டம் இதுதான்” எனக்கூறினார்.