சென்னையில் இந்த இடம் ரொம்ப ஸ்பெஷல்… ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளிய மோடி!

 

சென்னையில் இந்த இடம் ரொம்ப ஸ்பெஷல்… ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளிய மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாத கடைசி, ஞாயிற்றுக் கிழமையில் மக்கள் மத்தியில் உரையாற்றுவார். இந்த நிகழ்ச்சி மன் கி பாத் என்று அழைக்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி பேசும் போது, முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதோடு நாட்டின் நிலைமையை மக்களுக்கு எடுத்துரைப்பார்.

இந்த நிலையில், இன்று கடைசி ஞாயிற்றுக் கிழமையையொட்டி பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, தேர்வெழுத உள்ள மாணவர்கள் கவனமாக தேர்வுகளை எழுத வேண்டும். கவலையை விட்டுவிட்டு நம்பிக்கையுடன் எழுதுங்கள். நாட்டின் எல்லா இடங்களிலும் திறமைகள் இருக்கின்றன. அவை வெளிப்பட வேண்டும் என்று கூறினார்.

சென்னையில் இந்த இடம் ரொம்ப ஸ்பெஷல்… ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளிய மோடி!

தொடர்ந்து பேசிய மோடி, 100 வயதை எட்டியவர்கள் கூட தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். முன்பு போல் இல்லாமல் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் செலுத்துகின்றனர். வெகு விரைவில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து சென்னை கலங்கரை விளக்கத்தை பற்றி பேசிய அவர், பழமையான அந்த கலங்கரை விளக்கத்தை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். இந்தியாவிலேயே தனித்துவம் மிக்க கலங்கரை விளக்கம் சென்னையில் இருப்பது தான். நாடு முழுவதும் சுனாமியால் உயிரிழந்தவர்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்தார்.