“இறுதிக்கட்ட பரிசோதனையில் 3 தடுப்பூசிகள்” – பிரதமர் மோடி

 

“இறுதிக்கட்ட பரிசோதனையில் 3 தடுப்பூசிகள்” – பிரதமர் மோடி

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் திட்டங்களை அறிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று மக்களிடம் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்களை காப்பாற்றுவதற்காக நாட்டின் முப்படைகளையும் பயன்படுத்தினோம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதே நமக்கு கவசமாக இருக்கும். சரியான நேரத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளன என்று கூறினார்.

“இறுதிக்கட்ட பரிசோதனையில் 3 தடுப்பூசிகள்” – பிரதமர் மோடி

தொடர்ந்து பேசிய பிரதமர், வெளிநாடுகளிலிருந்து தேவையான மருந்துகள் அனைத்தையும் கொண்டு வந்துள்ளோம். மேலும் 3 புதிய தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனையின் உள்ளன. வரும் நாட்களில் தடுப்பூசிகளை விநியோகம் செய்வது அதிகரிக்கப்படும். மூக்கில் விடும் வகையிலான சொட்டு மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும். மிகக் குறைவாக காலத்தில் தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. 7 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உள்ளன. அவற்றில் 3 நிறைவடையும் தருணத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், மாநிலங்கள் நாங்கள் ஏன் தடுப்பூசியை தயாரிக்க கூடாது என கேள்வி எழுப்புகின்றன. மத்திய அரசு தடுப்பூசி விஷயத்தில் மாநிலங்களுக்கு விதிக்கப்பட்ட விதிகளின் படியே தொடர்ந்து செயல்படுகிறது என்றும் கூறினார்.