5 ஆண்டுகள் வாய்ப்பை கொடுங்கள்.. மேற்கு வங்கத்தை 70 ஆண்டு கால அழிவிலிருந்து விடுவிப்போம்.. மோடி உறுதி

 

5 ஆண்டுகள் வாய்ப்பை கொடுங்கள்.. மேற்கு வங்கத்தை 70 ஆண்டு கால அழிவிலிருந்து விடுவிப்போம்.. மோடி உறுதி

மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்ய 5 ஆண்டுகள் வாய்ப்பை கொடுங்கள், மாநிலத்தை 70 ஆண்டு கால அழிவிலிருந்து விடுவிப்போம் என்று மேற்கு வங்க மக்களுக்கு பிரதமர் மோடி வாக்குறுதி கொடுத்தார்.

மேற்கு வங்கம் காராக்புரில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: இந்த மாநில மக்கள் மம்தா பானர்ஜியை நம்பினர். ஆனால் அவர் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார். மத்திய அரசின் திட்டங்களை தடுப்பதில் சுவர் போல் நிற்கிறார் முதல்வர். வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் கனவுகள் 50 முதல் 55 ஆண்டுகள் குறைந்து விட்டது. ஆகையால் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற உங்கள் அவசரத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

5 ஆண்டுகள் வாய்ப்பை கொடுங்கள்.. மேற்கு வங்கத்தை 70 ஆண்டு கால அழிவிலிருந்து விடுவிப்போம்.. மோடி உறுதி
மம்தா பானர்ஜி, பா.ஜ.க.

மேற்கு வங்க இளைஞர்களின் மிகவும் முக்கியமான 10 ஆண்டுகளை மம்தா பானர்ஜி வீணாக்கி விட்டார். மம்தாவின் கட்சி கொடுமையின் பள்ளி. தோலாபாஜி, கட்-மணி மற்றும் சிண்டிகேட் அதன் பாடத்திட்டங்கள். மக்களை துன்புறுத்தல் மற்றும் பிரச்சினை செய்வதற்கான பயிற்சி மையம் திரிணாமுல் காங்கிரஸ். மேற்கு வங்கத்தின் எதிர்கால வளர்ச்சி பா.ஜ.க. அரசு அமைவது முக்கியம். இந்த போராட்டத்தில் பா.ஜ.க.வின் 130 தொண்டர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். விளையாடுவேன் என்று சகோதரி (மம்தா பானர்ஜி) தொடர்ந்து கூறுகிறார்.

5 ஆண்டுகள் வாய்ப்பை கொடுங்கள்.. மேற்கு வங்கத்தை 70 ஆண்டு கால அழிவிலிருந்து விடுவிப்போம்.. மோடி உறுதி
திரிணாமுல் காங்கிரஸ்

ஆனால் விளையாட்டு முடிவடையும், வளர்ச்சி தொடங்கும் என்று மக்கள் பதில் சொல்கிறார்கள். வாக்கு வங்கி அரசியலுக்காக முதல்வர் (மம்தா) திருப்திப்படுத்தும் விளையாட்டை விளையாடுகிறார். காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளால் அழிவை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். திரிணாமுல் காங்கிரஸ் உங்கள் கனவுகளை நாசமாக்கியது. நீங்கள் ஒவ்வொருவருக்கும் வாய்புகளை வழங்கினீர்கள். ஆனால் எங்களுக்கு 5 ஆண்டுகள் கொடுங்கள். வங்காளத்தை 70 ஆண்டுகால அழிவிலிருந்து விடுவிப்போம். நாங்கள் உங்களுக்காக எங்கள் வாழ்க்கையை தியாகம் செய்வோம்.