இன்று இந்தியா தீவிரவாதிகளை அவர்களின் இடங்களுக்கே சென்று கொல்லுகிறது..மோடி

 

இன்று இந்தியா தீவிரவாதிகளை அவர்களின் இடங்களுக்கே சென்று கொல்லுகிறது..மோடி

இன்று இந்தியா தீவிரவாதிகளையும் மற்றும் அவர்களது தலைவர்களையும் அவர்களில் இடங்களுக்கே சென்று கொல்லுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜெய்சல்மரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் பேசும்போது கூறியதாவது: எனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு இந்தியரின் வாழ்த்துக்களையும் இன்று உங்களிடையே கொண்டு வந்துள்ளேன். நீங்கள் பனி மூடிய மலைகளில் அல்லது பாலைவனங்களில் இருக்கலாம், நான் உங்கள் மத்தியில் வரும்போதுதான் எனது தீபாவளி நிறைவடைகிறது. உங்கள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை பார்க்கும்போது என் மகிழ்ச்சி இரட்டாகிறது.

இன்று இந்தியா தீவிரவாதிகளை அவர்களின் இடங்களுக்கே சென்று கொல்லுகிறது..மோடி
பிரதமர் மோடி

இமயமலையின் சிகரங்கள், பாலைவனத்தின் நீட்சி, அடர்ந்த காடுகள் அல்லது கடல்களின் ஆழம் எதுவாக இருந்தாலும் உங்கள் வீரம் எப்போதும் ஒவ்வொரு சவாலிலும் வெற்றி பெற்றது. 130 கோடி இந்தியர்களும் உங்களுடன் நிற்கிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் நம் வீரர்களின் வலிமை மற்றும் வீரம் குறித்து பெருமைப்படுகிறான். உங்களை வெல்ல முடியாததைப் பற்றி அவர்கள் பெருமைப்படுகிறார்கள். நம் நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதில் இருந்து துணிச்சலான வீரர்களை உலகில் எந்த சக்தியும் தடுக்க முடியாது. நீங்கள் இருக்கும் வரை, இந்த நாட்டின் தீபாவளி கொண்டாட்டங்கள் முழு வீச்சில் தொடரும்.

இன்று இந்தியா தீவிரவாதிகளை அவர்களின் இடங்களுக்கே சென்று கொல்லுகிறது..மோடி
பிரதமர் மோடி

இன்றைய இந்தியா தீவிரவாதிகளையும் மற்றும் அவர்களது தலைவர்களையும் அவர்களில் இடங்களுக்கே சென்று கொல்லுகிறது. இந்த நாடு அதன் நலன்களுடன் சமரசம் செய்யாது, எந்த விலையிலும் அல்ல என்பதை உலகம் இப்போது புரிந்து கொள்கிறது. இந்தியாவின் இந்த நற்பெயர் மற்றும் அந்தஸ்து அனைத்துக்கும் உங்கள் வலிமை மற்றும் வீரம் காரணமாகும். நீங்கள் தேசத்தை பாதுகாத்துள்ளதால் இந்தியா இன்று சர்வதேச அரங்குகளில் தனது கருத்துக்களை தெளிவாக முன்வைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.