மம்தா கட்சி தலைவர்கள் பணக்காரர்களாகி வருகிறார்கள், நடுத்தர குடும்பங்கள் ஏழ்மையாகின்றன.. மோடி தாக்கு

மம்தா கட்சி தலைவர்கள் பணக்காரர்களாகி வருகிறார்கள், நடுத்தர குடும்பங்கள் ஏழ்மையாகின்றன.. மோடி தாக்கு

மேற்கு வங்கத்தில் தலைவர்கள் பணக்காரர்களாகி வருகிறார்கள். நடுத்த குடும்பங்கள் ஏழ்மையாகின்றன என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கம் ஹூக்ளியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: விவசாயிகள் மற்றும் ஏழைகளின் வங்கி கணக்கு நேரடியாக பணத்தை மத்திய அரசு பரிமாற்றம் செய்கிறது. ஆனால் மேற்கு வங்க அரசின் நிதி ஆதாயங்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து கட்டண வசூலிப்பாளர்களின் அனுமதி இல்லாமல் மக்களை சென்றடையாது. இதனால்தான் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பணக்காரர்களாகி வருகிறார்கள். நடுத்த குடும்பங்கள் ஏழைகளாவும் மாறுகின்றன.

மம்தா கட்சி தலைவர்கள் பணக்காரர்களாகி வருகிறார்கள், நடுத்தர குடும்பங்கள் ஏழ்மையாகின்றன.. மோடி தாக்கு
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் 1-1.75 கோடி வீடுகள் உள்ளன. இதில் வெறும் 9 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே தண்ணீர் குழாய் இணைப்பு உள்ளது. மாநில அரசு (திரிணாமுல் காங்கிரஸ்) செயல்படும் விதம், ஏழைகளுக்கு தண்ணீர் இணைப்பு வழங்க இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதில் ஆச்சரியமில்லை. இது வங்கத்தின் மகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அநீதி இழைப்பதை காட்டுகிறது. அவர்களை மன்னிக்க முடியுமா?.

மம்தா கட்சி தலைவர்கள் பணக்காரர்களாகி வருகிறார்கள், நடுத்தர குடும்பங்கள் ஏழ்மையாகின்றன.. மோடி தாக்கு
திரிணாமுல் காங்கிரஸ்

இந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் இணைப்பு மத்திய அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கும். இது போன்ற பணிகள் பல தசாப்தங்களுக்கு முன்னர் செய்து இருக்க வேண்டும். இப்போது நாம் தாமதிக்கக்கூடாது. ரயில் பாதைகள் விரிவுப்படுத்துவதில் இருந்து மின்மயமாக்கல் பணிகள் வரை, உள்கட்டமைப்பு திட்டங்களில் பணம் முதலீடு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.