ஏழைகள்தான் என் நண்பர்கள்.. அவர்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.. எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த மோடி

 

ஏழைகள்தான் என் நண்பர்கள்.. அவர்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.. எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த மோடி

ஏழைகள்தான் என் நண்பர்கள், அவர்களுக்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்.

கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: என் அரசியல் எதிரிகள் நான் என் நண்பர்களுக்காக (கோடீஸ்வர தொழிலதிபர்கள்) பணியாற்றுவதாக பேசுகிறார்கள். நாம் யாருடன் சேர்ந்து வளர்ந்தோமோ அவர்கள்தான் நமக்கு நண்பர்கள். நான் ஏழ்மையோடு சேர்ந்து வளர்ந்தேன், என்னால் ஏழை மக்களின் வாழ்க்கையையும், சிரமங்களையும் புரிந்து கொள்ள முடியும். நான் என்னுடைய ஏழை நண்பர்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.

ஏழைகள்தான் என் நண்பர்கள்.. அவர்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.. எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த மோடி
சமையல் கியாஸ் சிலிண்டர்

கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் என்னுடைய ஏழை நண்பர்கள் பெரும் துன்பத்தில் இருந்தார்கள். கொரோனா வைரஸ் தொடங்கியபின் ஏழைகளுக்கு இலவசமான ரேஷன் பொருட்கள், கேஸ் சிலிண்டர்களை வழங்கினேன், கோடிக்கணக்கான பணத்தை அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தினேன். கொரோனா தடுப்பூசி உலகில் விலை அதிகமாக இருந்த நேரத்தில், நான் எனது ஏழை நண்பர்களுக்காக அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்தேன். நான் மேற்கு வங்கத்தில் உள்ள என் ஏழை நண்பர்களிடம் கேட்கிறேன், அவர்கள் என்னுடைய நட்புக்கு ஆதரவு அளிக்கப்போகிறார்களா அல்லது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஊழலுக்கு ஆதரவு அளிக்ககப்போகிறார்களா.

ஏழைகள்தான் என் நண்பர்கள்.. அவர்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.. எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த மோடி
திரிணாமுல் காங்கிரஸ்

திரிணமூல் காங்கிரஸின் விளையாட்டு முடிந்துவிட்டது, வளர்ச்சி தொடங்கிவிட்டது. அச்சமில்லாமல் பாஜகவுக்கு வாக்களியுங்கள், மோசமான நிர்வாகத்துக்கு எதிராக வாக்களியுங்கள். மம்தா கட்சியைச் சேர்ந்தவர்கள் அனுபவமானவர்கள், அதிகமாக விளையாடிவிட்டார்கள். ஏராளமான ஊழல் செய்து, மக்களிடம் இருந்து கொள்ளையடித்துவி்ட்டார்கள். அம்பான் புயலின்போது மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணத்தொகையைக் கூட கொள்ளையடித்துவிட்டார்கள். மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்துடனும், அவர்களின் வாழ்க்கையுடனும் விளையாடிவிட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.