எல்லையில் நேதாஜி கற்பனை செய்த இந்தியாவின் சக்தி வாய்ந்த அவதாரத்தை உலகம் பார்க்கிறது.. பிரதமர் மோடி

எல்லையில் நேதாஜி கற்பனை செய்த இந்தியாவின் சக்தி வாய்ந்த அவதாரத்தை உலகம் பார்க்கிறது.. பிரதமர் மோடி

உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி (எல்.ஏ.சி.) முதல் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி (எல்.ஓ.சி.) வரை, ஒரு காலத்தில் நேதாஜியால் கற்பனை செய்யப்பட்ட இந்தியாவின் சக்தி வாய்ந்த அவதாரத்தை உலகம் பார்த்து கொண்டு இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மெமோரியலில் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு வலிமை தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, முதல்வர் மம்தா பானர்ஜி, கவர்னர் ஜகதீப் தங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:

எல்லையில் நேதாஜி கற்பனை செய்த இந்தியாவின் சக்தி வாய்ந்த அவதாரத்தை உலகம் பார்க்கிறது.. பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கை, வேலை மற்றும் முடிவுகள் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம். அத்தகைய உறுதியான தீர்க்கமான ஒருவருக்கு சாத்தியமில்லாதது எதுவுமில்லை. எல்லை கட்டுப்பாட்டு பகுதி (எல்.ஏ.சி.) முதல் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி (எல்.ஓ.சி.) வரை, ஒரு காலத்தில் நேதாஜியால் கற்பனை செய்யப்பட்ட இந்தியாவின் சக்தி வாய்ந்த அவதாரத்தை உலகம் பார்த்து கொண்டு இருக்கிறது.

எல்லையில் நேதாஜி கற்பனை செய்த இந்தியாவின் சக்தி வாய்ந்த அவதாரத்தை உலகம் பார்க்கிறது.. பிரதமர் மோடி
இந்திய ராணுவம்

தனது இறையாண்மைக்கு எங்கியிருந்தும் சவால் விட முயற்சிகள் செய்தாலும் அதற்கு சரியான பதிலடியை இன்று இந்தியா கொடுக்கிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினைகளில் வறுமை, கல்வியறிவு, நோய் போன்றவற்றை குறிப்பிட்டார். சமூகம் ஒன்றிணைந்தால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி நேற்று நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார்.