ஊழல் அரசியல் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகி விட்டது..ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு நாளில் முடிந்து விடாது.. மோடி

ஊழல் அரசியல் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகி விட்டது..ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு நாளில் முடிந்து விடாது.. மோடி

பல மாநிலங்களில் ஊழல் அரசியல் பராம்பரியத்தின் ஒரு பகுதியாகி விட்டது. ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு நாளில் முடிந்து விடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு தொடர்பான மூன்று நாள் தேசிய மாநாட்டின் தொடக்க விழாவில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: ஊழல், பொருளாதார குற்றங்கள், போதைப்பொருள் வலையமைப்பு, பணமோசடி, பயங்கரவாதம் அல்லது பயங்கரவாத நிதியுதவி என இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளன.

ஊழல் அரசியல் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகி விட்டது..ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு நாளில் முடிந்து விடாது.. மோடி
பிரதமர் மோடி

எனவே ஊழலுக்கு எதிரான ஒரு முழுமையான அணுகுமுறையுடன், முறையான சோதனைகள், பயனுள்ள தணிக்கை மற்றும் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி மூலம் இணைந்து செயல்பட வேண்டும். ஊழல் நாட்டின் வளர்ச்சியை மட்டும் பாதிக்காது, சமூக சமநிலையையும் அழிக்கும். நாட்டின் அமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையையும் தாக்கும். அதனால்தான் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும், இது எந்தவொரு தனிப்பட்ட அமைப்பின் பொறுப்பு கிடையாது ஆனால் அனைவரின் கூட்டு பொறுப்பு. நாட்டின் ஏழைகள்தான் ஊழல் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஊழலை நீக்குவதற்கும், அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளை வங்கி கணக்கு மூலம் நேரடியாக கடைசி நபருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் ஒரு வெற்றிகரமான எடுத்துக்காட்டு டி.பி.டி. திட்டம்.

ஊழல் அரசியல் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகி விட்டது..ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு நாளில் முடிந்து விடாது.. மோடி
ஊழலுக்கு எதிர்ப்பு

கடந்த பல பத்தாண்டுகளில் ஊழலில் ஈடுபட்ட ஒரு தலைமுறை தண்டிக்கப்படவில்லை என்பதை நாம் பார்த்தோம். அடுத்த தலைமுறை அந்த ஊழலை மிகவும் அதிக சக்தியுடன் முன்னெடுத்து செல்லும். இதனால் பல மாநிலங்களில் இது ஒரு அரசியல் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகி விட்டது. ஊழலின் இந்த வம்சம் தலைமுறை தலைமுறையாக நாட்டை வெறுமையாக்கிறது. ஊழலுக்கான போராட்டம் ஒரு நாளில் முடிந்து விடாது. ஊழலக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போரில் நாட்டை அனைத்து மக்களும் வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.