நிலையான சிந்தனை இல்லாத கட்சி.. நிலையான அரசாங்கத்தை கொடுக்க முடியுமா?.. அசாமில் காங்கிரசை தாக்கிய மோடி

 

நிலையான சிந்தனை இல்லாத கட்சி.. நிலையான அரசாங்கத்தை கொடுக்க முடியுமா?.. அசாமில் காங்கிரசை தாக்கிய மோடி

அசாமில், நிலையான சிந்தனை இல்லாத ஒரு கட்சி மாநிலத்தில் ஒரு நிலையான அரசாங்கத்தை கொடுக்க முடியுமா? என்று காங்கிரஸை பிரதமர் நரேந்திர மோடி தாக்கினார்

அசாமில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 27ம் தேதி தொடங்கி மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. அதற்காக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. அசாமில் கரிம்கஞ்சில் பா.ஜ.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:

நிலையான சிந்தனை இல்லாத கட்சி.. நிலையான அரசாங்கத்தை கொடுக்க முடியுமா?.. அசாமில் காங்கிரசை தாக்கிய மோடி
பா.ஜ.க.

காங்கிரஸ் கட்சி அசாமை எல்லா வகையிலும் பிளவுப்படுத்திய நிலையில், பா.ஜ.க. அசாமை எல்லா வகையிலும் இணைக்க முயன்றது. ஒவ்வொருவரின் வளர்ச்சி, எல்லோருடைய வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை என்பதுதான் அசாமில் பா.ஜ.க.வின் மந்திரம். பல தசாப்தங்களக்கு முன்னர் இந்த முழு பிராந்தியமும் சிறந்த இணைப்பை கொண்டு இருந்தது. ஆனால் காங்கிரசின் ஊழல் மற்றும் வாக்கு வங்கி அடிப்படையிலான ஆட்சி ஆகியவை அசாமை இந்தியாவில் மிகவும் துண்டிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளன. காங்கிரசுக்கு நிலையான சிந்தனை செயல்முறை இல்லை.

நிலையான சிந்தனை இல்லாத கட்சி.. நிலையான அரசாங்கத்தை கொடுக்க முடியுமா?.. அசாமில் காங்கிரசை தாக்கிய மோடி
காங்கிரஸ்

காங்கிரஸ் அரசாங்களும் அவற்றின் கொள்கைகளும் அசாமை சமூக, கலாச்சார, புவியியல் மற்றும் அரசியல் ரீதியாக சேதப்படுத்தின. 2016ம் ஆண்டில் நான் இங்கு வந்தபோது, காங்கிரஸ் அரசாங்கங்கள் கவுகாத்தியிலிருந்து பராக் பள்ளத்தாக்கிற்கான மண்டல ஆணையாளரை நடத்தின என்பதை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த அநீதியை தேசிய ஜனநாயக அரசு வென்றுள்ளது. ஒருபுறம் பா.ஜ.க.வுக்கு ஒரு கொள்கை, தலைமை மற்றும் நல்ல நோக்கங்கள் உள்ளன. மறுபுறம் காங்கிரசுக்கு ஒரு தலைவரோ, கொள்கையோ, சித்தாந்தமோ இல்லை. காங்கிரஸ் மிகவும் பலவீனமாகி விட்டது. அந்த கட்சி எந்த அளவுக்கும் சென்று யாருடனும் கைகோர்க்க முடியும். நிலையான சிந்தனை இல்லாத ஒரு கட்சி அசாமுக்கு ஒரு நிலையான அரசாங்கத்தை கொடுக்க முடியுமா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.