“கொரோனாவுக்காக விளக்கேற்றும் நிகழ்வை கிண்டல் செய்தனர்” – பிரதமர் மோடி உரை

“கொரோனாவுக்காக விளக்கேற்றும் நிகழ்வை கிண்டல் செய்தனர்” – பிரதமர் மோடி உரை

இந்தியா புதிய வாய்ப்புகளுக்கான பூமி, பல அரிய வாய்ப்புகள் நமக்குக் காத்திருக்கின்றன என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

“கொரோனாவுக்காக விளக்கேற்றும் நிகழ்வை கிண்டல் செய்தனர்” – பிரதமர் மோடி உரை

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசி வரும் பிரதமர் மோடி, “இந்தியாவில் நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன . உலகமே தற்போது இந்தியா முன்னெடுத்து இருக்கக் கூடிய தீர்வுகளை கண்டறிய கவனம் செலுத்துகிறது. இளைஞர்கள் தங்கள் கனவுகளை எட்டிப்பிடிக்க தற்போதுள்ள வாய்ப்புகளை நழுவவிட அனுமதிக்க மாட்டோம். மனித இனம் இப்படி ஒரு சிக்கலான நேரத்தை சந்திக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். கொரோனாவுக்காக விளக்கேற்றும் நிகழ்வை கூட சிலர் கிண்டல் செய்தனர். ஏழைகள் கூட நாட்டின் ஒற்றுமைக்காக வீடுகளில் விளக்குகளை ஏற்றினார்கள். அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக விளக்கேற்றும் நிகழ்வை கூட கிண்டல் செய்தனர்” என்றார்.

“கொரோனாவுக்காக விளக்கேற்றும் நிகழ்வை கிண்டல் செய்தனர்” – பிரதமர் மோடி உரை

தொடர்ந்து பேசிய அவர், குடியரசு தலைவரின் உரையை கேட்காமலேயே பலரும் அது குறித்து விமர்சனம் செய்கின்றனர்.குடியசு தலைவர் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது குறித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி விமர்சித்தார். அத்துடன் குடியரசு தலைவர் உரை வலிமையானது என்பதால் அதை கேட்காதவர்களிடம் கூட சென்று சேர்ந்து இருக்கிறது” என்றார்.