கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!

 

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர சுகாதாரத்துறையினர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதே போல, மாநில அரசுகளும் அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன.

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!

குறிப்பாக பாதிப்பு அதிகமாக இருக்கும் டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை வாசலில் நோயாளிகள் காத்துக் கிடக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. சில இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!

இந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அனைத்து ஆக்சிஜன் நிலையங்களிலும் அதன் கொள்ளளவுக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்பும் இடங்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தேவையான அளவுக்கு ஆக்சிஜன் கையிருப்பில் இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்த சுகாதாரத்துறை, ஆக்சிஜன் சிலிண்டர்களை ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு கொண்டு செல்வதில் சிக்கல் நீடிப்பதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.