புதிய அமைச்சர்களுடன்… மிகப்பெரிய கூட்டத்தை கூட்ட திட்டமிட்டிருக்கும் பிரதமர் மோடி!

 

புதிய அமைச்சர்களுடன்… மிகப்பெரிய கூட்டத்தை கூட்ட திட்டமிட்டிருக்கும் பிரதமர் மோடி!

புதிய அமைச்சர்கள் குழுவுடன் பிரதமர் மோடி அடுத்த வாரத்தில் 3 நாட்களுக்கு ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. 43 உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். பல்வேறு துறைகளுக்கான அமைச்சர்களும் மாற்றியமைக்கப்பட்டனர். இந்த நிலையில், புதிதாக பதவியேற்றிருக்கும் அமைச்சர்கள் குழுவுடன் 3 நாட்கள் ஆலோசனை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டிருக்கிறாராம். வரும் 10ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ள அக்கூட்டத்தில் மத்திய அரசின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் பற்றி அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.

புதிய அமைச்சர்களுடன்… மிகப்பெரிய கூட்டத்தை கூட்ட திட்டமிட்டிருக்கும் பிரதமர் மோடி!

மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், அரசின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஒவ்வொரு துறையினரும் செயல் திட்டங்களுடன் வருமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடி ஆட்சியில் 2 ஆண்டுகள் கடந்து விட்டது. எஞ்சியுள்ள 3 ஆண்டுகளுக்குள் மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்துவது, ஏற்கனவே இருக்கும் திட்டங்களை ஊக்குவிப்பது போன்ற பல்வேறு விவகாரங்கள் பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாம். அதோடு, ஒரு சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் அதை பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி திடீரென மிகப்பெரிய அளவிலான கூட்டத்தை கூட்டுவது எதிர்க்கட்சியின் கவனத்தை ஈர்த்துள்ளது.