தனது தலைவரை கவர தவறாக மொழிமாற்றம் செய்தவருக்கு தேர்தலில் சீட் கொடுக்கவில்லை.. நாராயணசாமியை கிண்டலடித்த மோடி

தனது தலைவரை கவர தவறாக மொழிமாற்றம் செய்தவருக்கு தேர்தலில் சீட் கொடுக்கவில்லை.. நாராயணசாமியை கிண்டலடித்த மோடி

பல ஆண்டுகள் விசுவாசம், தலைவரின் செருப்பை தூக்கி, தனது தலைவரை கவர தவறாக மொழிமாற்றம் செய்தவருக்கு தேர்தலில் சீட் கொடுக்கவில்லை என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியை பிரதமர் மோடி கிண்டல் அடித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. நேற்று அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: பல ஆண்டுகள் விசுவாசம், தனது தலைவரின் செருப்பை தூக்கி, தனது தலைவரை கவர வேண்டும் என்று தவறாக மொழிமாற்றம் செய்தவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. இது அவரது அரசாங்கம் எவ்வளவு பேரழிவாக மாறியுள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது.

தனது தலைவரை கவர தவறாக மொழிமாற்றம் செய்தவருக்கு தேர்தலில் சீட் கொடுக்கவில்லை.. நாராயணசாமியை கிண்டலடித்த மோடி
நாராயணசாமி

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாக ஊழல் குறித்து பேசி கொண்டிருந்தனர். முன்னாள் முதல்வரின் குடும்பத்தினருடன் நேரடியாக தொடர்பு கொண்டு இருந்தனர். தற்போதைய முதல்வருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்பதால் புதுச்சேரி தேர்தல் மிகவும் தனித்துவமானது. ஏனெனில் சிட்டிங் முதலமைச்சருக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை.

தனது தலைவரை கவர தவறாக மொழிமாற்றம் செய்தவருக்கு தேர்தலில் சீட் கொடுக்கவில்லை.. நாராயணசாமியை கிண்டலடித்த மோடி
காங்கிரஸ்

பல ஆண்டுகளாக செயல்படாத காங்கிரஸ் அரசாங்கத்தின் நீண்ட பட்டியலில், முந்தைய புதுச்சேரி அரசாங்கத்துக்கு ஒரு சிறப்பு இடம் இருந்தது. புதுச்சேரியின் டெல்லி உயர் கட்டளை அரசாங்கம் அனைத்து முனைகளிலும் தோல்வியுற்றது, எந்தவொரு துறையையும் எடுத்துக்கொள்ளுங்கள்- கல்வி, மருத்துவ இடங்களை நிரப்புதல், எஸ்.சி,எஸ்.டி.க்களின் நலன் ஆகியவற்றில் கொள்ளை மட்டுமே நடந்தது. .இவ்வாறு அவர் தெரிவித்தார்.