கொரோனாவிலிருந்து பாதுகாக்க 6 வயது குழந்தையை தனிமைப்படுத்திய தாய்.. பாராட்டிய மோடி

 

கொரோனாவிலிருந்து பாதுகாக்க 6 வயது குழந்தையை தனிமைப்படுத்திய தாய்.. பாராட்டிய மோடி

தன்னால் தனது 6 வயது குழந்தை பாதிக்கப்படாது என்று குழந்தையை தனிமைப்படுத்திய உத்தர பிரதேசத்தை சேர்ந்த தாயை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

காசியாபாத்தின் செக்டர்-6ல் தனது கணவர் கவுசிக் மற்றும் 6 வயது மகனுடன் பூஜா வர்மா என்ற பெண்மணி வசித்து வருகிறார். 3 படுக்கையறைகள் கொண்ட ஒரு குடியிருப்பில் அவர்கள் வசித்து வருகிறார்கள் இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தனது கணவருடன் பூஜா வர்மாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டார். சோதனையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.

கொரோனாவிலிருந்து பாதுகாக்க 6 வயது குழந்தையை தனிமைப்படுத்திய தாய்.. பாராட்டிய மோடி
கொரோனா வைரஸ்

இதனையடுத்து மூவரும் தனி அறைகளில் தனிமைப்படுத்தி கொள்ளும் கடினமான முடிவை கவுசிக்-வர்மா தம்பதியினர் முடிவு செய்தனர். கொரோனா வைரஸ் என்றால் என்ன அல்லது கோவிட் தொடர்பான விதிமுறைகள் என்ன மற்றும் இந்த தனிமைப்படுத்துதலின் தேவை என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாத, தனது பெற்றோரின் அன்புக்காக ஏங்கிய 6 வயது குழந்தைக்கு இது எளிதானது அல்ல. பெற்றொரிடமிருந்து தனித்தனி அறையில் தங்கிறோம் என்றால் நாம் என்ன தவறு செய்தோம் என்று குழந்தை யோசித்து கொண்டு இருந்துள்ளது என்று பூஜா வர்மா தெரிவித்தார்.

கொரோனாவிலிருந்து பாதுகாக்க 6 வயது குழந்தையை தனிமைப்படுத்திய தாய்.. பாராட்டிய மோடி
பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு பூஜா வர்மா எழுதிய கடிதத்தில் ஒரு கவிதை மூலம் தனது குழந்தையிடமிருந்து விலகி இருக்க வேண்டிய ஒரு தாயாக தனது சோதனையை விவரித்து இருந்தார். அந்த கடிதத்தில், கடினமான சூழ்நிலைகளில் கூட, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும கோவிட் இணக்கமான நடத்தையை தைரியத்துடன் பின்பற்றுவதன் மூலம் இந்த நோயை எதிர்த்து போராடியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பொறுமையை இழக்காதீர்கள், துன்ப காலங்களில் தைரியத்தை தக்க வைத்து கொள்ளவும் சாஸ்திர கொள்ளவும் சாஸ்திரங்கள் நமக்கு கற்றுக் கொடுத்தன. தைரியம் மற்றும் நேர்மறையான சிந்தனையுடன் வர்மா தொடர்ந்து முன்னேறி வாழ்க்கையில் வரும் எந்த சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொள்வார் என்ற நம்புகிறேன் என்று தெரிவித்து இருந்தார்.