கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் கொடுத்த ஐடியா இதுதான்?

 

கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் கொடுத்த ஐடியா இதுதான்?

கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கர்நாடகா, பிஹார், அசாம், சண்டீகர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், கோவா, இமாச்சலப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்ககளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் இக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்.

கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் கொடுத்த ஐடியா இதுதான்?

ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது பின்வருமாறு:

அதிவேகமான பரிசோதனை, பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து கண்காணித்தல், தரமான சிகிச்சை அளித்தல் மூலம் தான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இவை தான் கொரோனாவை வெல்வதற்கான முக்கியமான ஆயுதங்கள்.

கொரோனாவுக்கு எதிரான போரில் நீங்கள் தான் படைத்தளபதிகள். பல மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனால், சில இடங்களில் அதிகரித்து வருகிறது என்பதைக் கவனியுங்கள். பரவலைக் குறைப்பதற்கான பணியில் தீவிரமாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் உயிரையும் பாதுகாக்க வேண்டும்.

கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் கொடுத்த ஐடியா இதுதான்?

கொரோனா இரண்டாவது அலையில் கிராமங்களில் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஆதலால், கிராமங்கள், போக்குவரத்து வசதியில்லாத பகுதிகளில் அதிகமான கவனம் செலுத்தி கொரோனா பரவலைக் குறைக்க வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பிஎம் கேர்ஸ் நிதியுதவி மூலம் ஆக்சிஜன் உற்பத்தி திட்டம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் கொடுத்த ஐடியா இதுதான்?

கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் தேவையற்ற கட்டுக்கதைகள் பரப்பி விடப்படுகின்றன. நம்பகத்தன்மையற்ற தகவல்கள் செல்கின்றன. அவற்றைத் தடுக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி தான் சக்திவாய்ந்த ஆயுதம். தடுப்பூசி சப்ளையை அதிகப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதிலும், சப்ளையைச் சீரமைப்பதிலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.