கொரோனாவின் கோரதாண்டவம்.. பிரதமர் மோடி திடீர் ஆலோசனை!

 

கொரோனாவின் கோரதாண்டவம்.. பிரதமர் மோடி திடீர் ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமெடுக்கத் தொடங்கி விட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 50 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு இன்று ஒரு லட்சத்தை எட்டி புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன் மூலம், உலக அளவில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

கொரோனாவின் கோரதாண்டவம்.. பிரதமர் மோடி திடீர் ஆலோசனை!

முதல் அலையின் போது அதிகபட்சமாக கடந்த செப்டம்பர் மாதம் 98 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டியிருப்பது சுகாதாரத்துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தும் பாதிப்பு பன்மடங்கு அதிகரிப்பது மக்கள் மத்தியில் பீதியை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரவல் குறித்தும் தடுப்பு நடவடிக்கை குறித்தும் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடனும் வரும் 8ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். அக்கூட்டத்தின் போது மீண்டும் லாக்டவுன் போடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.