தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை கண்டு தேசம் வேதனை அடைந்தது- மோடி.. முதலை கண்ணீர் என்ற காங்கிரஸ்

 

தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை கண்டு தேசம் வேதனை அடைந்தது- மோடி.. முதலை கண்ணீர் என்ற காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடி தனது மான் கி பாத் நிகழ்ச்சியில், ஜனவரி 26ம் தேதியன்று தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதை கண்டு தேசம் வேதனை அடைந்தது என்று தெரிவித்தார். ஆனால் பிரதமர் முதலை கண்ணீர் வடிக்கிறார் என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்தது.

கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று, டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது பெரும் வன்முறை ஏற்பட்டது. விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கும்பலை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள், லத்தி சார்ஜ் உள்ளிட்ட நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர். செங்கோட்டைக்குள் புகுந்த விவசாயிகள் அங்கு விவசாய சங்கங்களின் கொடிகளை ஏற்றினர். தேசிய கொடி மட்டுமே பறக்க வேண்டிய செங்கோட்டையில் விவசாய சங்கங்களின் கொடிகள் ஏற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை கண்டு தேசம் வேதனை அடைந்தது- மோடி.. முதலை கண்ணீர் என்ற காங்கிரஸ்
செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் (கோப்புப்படம்)

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 73வது மான் கி பாத் (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியில், விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை சம்பவத்தை குறிப்பிட்டு, ஜனவரி 26ம் தேதியன்று தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதை கண்டு நாடு வேதனை அடைந்தது என்று தெரிவித்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உடனடியாக பதிலடி கொடுத்தது.

தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை கண்டு தேசம் வேதனை அடைந்தது- மோடி.. முதலை கண்ணீர் என்ற காங்கிரஸ்
திக்விஜய சிங்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் டிவிட்டரில், ஜனவரி 26ம் தேதியன்று தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதை கண்டு தேசம் அதிர்ச்சியடைந்தது- பிரதமர் மோடி அதிர்ச்சி அடைந்தார். சுதந்திரம் அடைந்த பிறகு பல தசாப்பதங்களாக தேசிய கொடியை ஏற்ற மறுத்த ஆர்.எஸ்.எஸ். உடன் இணைந்திருக்கும் நீங்கள் அது குறித்து ஏன் அதிர்ச்சியடையவில்லை. முதலை கண்ணீர் திரு. மோடி என்று பதிவு செய்து இருந்தார்.