‘ராகுலிடம் நாராயணசாமி பொய் சொன்னார்’ – காங்கிரஸ் மீது மோடி கடும் விமர்சனம்!

 

‘ராகுலிடம் நாராயணசாமி பொய் சொன்னார்’ – காங்கிரஸ் மீது மோடி கடும் விமர்சனம்!

ராகுல் காந்தியிடம் நாராயணசாமி பற்றி பெண் ஒருவர் புகாரளித்த வீடியோ குறித்து பிரதமர் மோடி விமர்சித்தார்.

புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் நாராயணசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். எதிர்க்கட்சிகளும் ஆட்சியை கையிலெடுக்க முன்வராததால் அங்கு குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டது, புதுச்சேரி அரசியல் களத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

‘ராகுலிடம் நாராயணசாமி பொய் சொன்னார்’ – காங்கிரஸ் மீது மோடி கடும் விமர்சனம்!

இந்த நிலையில், புதுச்சேரி லாஸ்பேட்டையில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அக்கூட்டத்தில் பேசிய அவர், ராகுல் காந்தியிடம் நாராயணசாமி பொய் சொன்னார். பொய் சொல்வதில் அனைத்து பதக்கங்களையும் பெற்றவர்கள் காங்கிரஸ்காரர்கள். பரம்பரை அரசியல் நாடு முழுவதும் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. மோசமான காங்கிரஸ் அரசு நிர்வாகத்திடம் இருந்து புதுச்சேரி மக்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது என காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார்.

‘ராகுலிடம் நாராயணசாமி பொய் சொன்னார்’ – காங்கிரஸ் மீது மோடி கடும் விமர்சனம்!

புதுச்சேரியில் தற்போது காற்று மாறி வீசுகிறது. மாநில மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். குஜராத், காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் புதுச்சேரியில் நடைபெறவில்லை. புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்க வில்லை. மத்திய நிதியை பயன்படுத்தவில்லை என அதிரடியாக பேசினார். மேலும், புதுச்சேரியில் மக்கள் சக்தியால் இயங்கும் அரசு வரும் சட்டமன்ற தேர்தலில் அமையும் என்றும் அவர் கூறினார்.