‘வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட PSLV-C49 ராக்கெட்’ – பிரதமர் மோடி வாழ்த்து!

‘வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட PSLV-C49 ராக்கெட்’ – பிரதமர் மோடி வாழ்த்து!

PSLV-C49 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

‘வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட PSLV-C49 ராக்கெட்’ – பிரதமர் மோடி வாழ்த்து!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இ.ஓ.எஸ். 01 என்ற செயற்கை கோள், PSLVC 49 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. புவி கண்காணிப்பு பணிக்காக உருவாக்கப்பட்ட அனுப்பப்பட்டிருக்கும் இந்த செயற்கைக்கோளுடன் வணிக ரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைக்கோள்கள் இணைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

‘வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட PSLV-C49 ராக்கெட்’ – பிரதமர் மோடி வாழ்த்து!

கொரோனாவால் கடும் நெருக்கடி நிலவிய சூழலிலும், தீவிர முயற்சியால் PSLV-C49 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “PSLV-C49 ரக்கெட்டை விண்ணில் செலுத்தி EOS-01 மிஷனை வெற்றிகரமாக முடித்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். கொரோனா காலத்திலும் நமது விஞ்ஞானிகள் காலக்கெடுவில் ராக்கெட்டை செலுத்த பல தடைகளை முறியடித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் லக்சம்பேர்க்கில் இருந்து தலா நான்கு மற்றும் லித்துவேனியாவிலிருந்து ஒன்று உட்பட ஒன்பது செயற்கைக்கோள்களும் மிஷனில் ஏவப்பட்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.