“சகோதரி மம்தாவுக்கு அன்புநிறை வாழ்த்துகள்” – பிரதமர் மோடியின் வாழ்த்து மடல்!

 

“சகோதரி மம்தாவுக்கு அன்புநிறை வாழ்த்துகள்” – பிரதமர் மோடியின் வாழ்த்து மடல்!

மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு 213 தொகுதிகளை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. இதன்மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சியமைக்கிறார். இந்தத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக 77 இடங்களில் வென்றது.

“சகோதரி மம்தாவுக்கு அன்புநிறை வாழ்த்துகள்” – பிரதமர் மோடியின் வாழ்த்து மடல்!

மம்தா பானர்ஜியின் கட்சி வென்றாலும் அவர் நந்திகிராமில் போட்டியிட்டு சுவேந்து அதிகாரியிடம் வெற்றிவாய்ப்பை இழந்தார். ஆனால் முதலமைச்சராகப் பொறுப்பேற்க எந்தத் தடையும் இல்லை. இருப்பினும் ஆறு மாதங்களுக்குள் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றே ஆக வேண்டும். இல்லையென்றால் முதலமைச்சராக நீடிக்க முடியாது. நந்திகிராமில் முறைகேடு நடந்திருப்பதால் நீதிமன்றத்தை நாடவிருப்பதாக மம்தா கூறியிருக்கிறார்.

இச்சூழலில் இன்று மூன்றாவது முறையாக மம்தா முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மம்தாவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அந்த ட்வீட்டில், “மேற்கு வங்க முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சகோதரி மம்தாவுக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.