திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் டிவிட் மக்களை அவமதிப்பதாகும்.. பிரதமர் மோடி கண்டனம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் டிவிட் மக்களை அவமதிப்பதாகும்.. பிரதமர் மோடி கண்டனம்

மசோதாக்கள் நிறைவேற்றுவதை பாப்ரி சாட் செய்வதுடன் ஒப்பிட்டு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டிவிட் செய்ததை பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் டிவிட்டரில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் 10 தினங்களில், மோடி-ஷா விரைவாக 12 மசோதாக்களை சராசரியாக ஒரு மசோதாவை ஏழு நிமிடங்களுக்குள் நிறைவேற்றினார்கள். சட்டங்களை நிறைவேற்றுவது அல்லது பாப்ரி சாட் செய்வது! என்று பதிவு செய்து இருந்தார். மேலும் அதனுடன் மசோதாக்கள் எவ்வளவு நேரத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது தொடர்பான புள்ளிவிவரத்தை அதில் பதிவேற்றம் செய்து இருந்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் டிவிட் மக்களை அவமதிப்பதாகும்.. பிரதமர் மோடி கண்டனம்
டெரிக் ஓ பிரியன்

டெரிக் ஓ பிரியன் கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி கூட்டம் நேற்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மத்திய அரசு மசோதாக்களை நிறைவேற்றுவது பாப்ரி சாட் செய்வது போல் உள்ளது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கூறியிருப்பது, மக்களை அவமதிப்பதாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் டிவிட் மக்களை அவமதிப்பதாகும்.. பிரதமர் மோடி கண்டனம்
பிரகலாத் ஜோஷி

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு இது (டெரிக் ஓ பிரியன் கருத்து) ஒரு அவமதிப்பு என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். மேலும், பாப்ரி செய்வது என்பது அவமானகரமான கருத்து, காகிதங்களை கிழித்து எறிவது, மன்னிப்பு கேட்காதது ஆணவம் என்று பிரதமர் கூறினார் என்று தெரிவித்தார்.