முருகனுக்காக தமிழகம் வரும் மோடி.. விழி பிதுங்கும் எதிர்க்கட்சிகள்!

 

முருகனுக்காக தமிழகம் வரும் மோடி.. விழி பிதுங்கும் எதிர்க்கட்சிகள்!

தமிழகத்தில் வரும் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 4ம் தேதியோடு பிரச்சாரம் முடிவடைய உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட 5 கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளன. இதனிடையே திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் தேசிய கட்சிகளின் தலைவர்களும் தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர்.

முருகனுக்காக தமிழகம் வரும் மோடி.. விழி பிதுங்கும் எதிர்க்கட்சிகள்!

அந்த வகையில், தாராபுரத்தில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவிருக்கிறார். மோடியுடன் ஒரே மேடையில் இணைந்து முதல்வர் பழனிசாமியும் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார். பிரதமரின் வருகையையொட்டி தாராபுரத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், பாஜகவினர் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

முருகனுக்காக தமிழகம் வரும் மோடி.. விழி பிதுங்கும் எதிர்க்கட்சிகள்!

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று சேலத்துக்கு வந்திருந்தார். அங்கு நடைபெற்றக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், ஸ்டாலினுடன் இணைந்து ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளை விமர்சித்து கடுமையாக பேசினார். ராகுல்காந்தியின் பேச்சு, பிற கட்சிகளை திரும்பி பார்க்க வைத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நாளை எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து மோடி பிரச்சாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.