பிரதமர் மோடி திடீர் தமிழகம் வருகை: காரணம் இது தான்!

 

பிரதமர் மோடி திடீர் தமிழகம் வருகை: காரணம் இது தான்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் குறித்து ஆலோசிக்கவே முதல்வர் டெல்லி சென்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்ததாகவும் மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை தொடக்கி வைக்க அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும், முதல்வரின் இந்த பயணம் அரசியல் ரீதியானதாகவே பார்க்கப்பட்டது.

பிரதமர் மோடி திடீர் தமிழகம் வருகை: காரணம் இது தான்!

இந்த நிலையில், முதல்வரின் அழைப்பை ஏற்று வரும் பிப்.14ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களை தொடக்கி வைக்கவும் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவும் அவர் தமிழகம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அண்மையில் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுகவுடனான கூட்டணியை உறுதி படுத்திவிட்டுச் சென்றார்.

பிரதமர் மோடி திடீர் தமிழகம் வருகை: காரணம் இது தான்!

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தமிழகத்திற்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில், பிரதமர் மோடியின் வருகை தமிழக அரசியல் களத்தில் மாற்றங்களை ஏற்படுத்துமா என உற்று நோக்கப்படுகிறது.