‘மீண்டும் மோடி என்ட்ரி’.. குஷியில் இரட்டைத் தலைமை!

 

‘மீண்டும் மோடி என்ட்ரி’.. குஷியில் இரட்டைத் தலைமை!

மார்ச் 30ஆம் தேதி தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்கிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களே எஞ்சியிருப்பதால் பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன. திமுகவா? அதிமுகவா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. கருத்துக் கணிப்புகள் பல திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சொல்கின்றன. ஆனால் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டிருக்கும் அதிமுக, மத்திய பாஜகவுடன் கூட்டணி அமைத்து பல்வேறு வியூகங்களை வகுத்திருக்கிறது.

‘மீண்டும் மோடி என்ட்ரி’.. குஷியில் இரட்டைத் தலைமை!

அவ்வப்போது மத்திய பாஜக தலைவர்கள் தமிழகம் வருவதும் அதிமுக வியூகங்களுள் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. வட மாநிலங்களை தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் பாஜக அரசால், தென் மாநிலங்களில் காலூன்ற முடியவில்லை. அதனால், இந்த தேர்தலில் வென்று சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டுமென பாஜக திட்டமிட்டிருக்கிறது. அதற்காக பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார்.

‘மீண்டும் மோடி என்ட்ரி’.. குஷியில் இரட்டைத் தலைமை!

அண்மையில் மோடி தமிழகத்துக்கு வந்தது எதிர்கட்சிகளை ஆட்டம் காண வைத்தது. ஓபிஎஸ் – ஈபிஎஸ் கரங்களை உயர்த்தி ஆட்சி நமதே என்று அவர் குறிப்பால் உணர்த்தியது திமுக உள்ளிட்ட கட்சிகளை பீதி அடையச் செய்தது என்றே சொல்ல வேண்டும். மோடி தமிழகத்தில் இருந்து சென்ற பிறகும் அவரைப் பற்றிய பேச்சுக்களே பரவலாக இருந்தது.

‘மீண்டும் மோடி என்ட்ரி’.. குஷியில் இரட்டைத் தலைமை!

இந்த நிலையில், தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள பிரதமர் மோடி மார்ச் 30ஆம் தேதி தமிழகம் வரவிருப்பதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதற்கு முன்னதாக வரும் 26ஆம் தேதி ஜே.பி.நட்டாவும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமிழகம் வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மோடியின் இந்த ரீ-என்ட்ரி இரட்டைத் தலைமை குஷியாக்கியுள்ளது. காரணம், கடந்த முறை மோடி வந்த போது அதிமுகவைக் கண்டு எதிர்க்கட்சிகள் மிரண்டு போனது தான். இந்த முறை என்னவெல்லாம் நடக்குமோ என மோடியின் வருகையை எதிர்நோக்கி வழி மேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கிறார்கள்.