‘துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு’ பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

 

‘துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு’ பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்திற்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

‘துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு’ பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழகமே இன்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில், பொங்கல் பண்டிகையுடன் சேர்த்து பிறந்தநாளையும் ஓபிஎஸ் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்களும் அதிமுக பிரமுகர்களும் உறுப்பினர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியும் ஓபிஎஸ்க்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

‘துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு’ பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

அதில், “பன்னீர் செல்வம் ஜி, உங்களுக்கு என் இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் மங்களமும் மகிழ்ச்சியும் வரும் ஆண்டுகளில் தினமும் வெளிப்படட்டும். உடல் நலத்துக்கும் மகிழ்ச்சிக்கும் கட்டியம் கூறட்டும். உங்களின் வளமான பல்வேறு அனுபவங்கள் தொடர்ந்து இத்திருநாட்டின் உயர்வுக்கு உதவட்டும். அன்புடன், நரேந்திர மோடி” என்று குறிப்பிட்டுள்ளார்.