வேளாண் சட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சிகாக எதிர்கின்றனர் – பிரதமர் மோடி

வேளாண் சட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சிகாக எதிர்கின்றனர் –  பிரதமர் மோடி

வேளாண் சட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சிகாக சிலர் எதிர்கின்றனர் என்று பிரதமர் மோடி குற்றச்சாட்டியுள்ளார்.

வேளாண் சட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சிகாக எதிர்கின்றனர் –  பிரதமர் மோடி

கங்கையை புத்துயிரூட்டும் திட்டத்தின் கீழ் உத்ரகாண்டில் ஆறு மெகா திட்டங்களை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ” வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளை சிலர் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சுகாதார பணிகளில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

வேளாண் சட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சிகாக எதிர்கின்றனர் –  பிரதமர் மோடி

வேளாண் திருத்தச் சட்ட மசோதாக்கள் மூலம் விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் உரிமையை மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுத்தமான குடிநீர் வழங்க மத்திய நீர்வளத்துறை முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” என்றார். இதனிடையே நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில் மோடி இவ்வாறு கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.