பீகாரில் மோடி, ராகுல் காந்தி… தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கும் அரசியல் கட்சிகள்…

 

பீகாரில் மோடி, ராகுல் காந்தி… தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கும் அரசியல் கட்சிகள்…

பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அங்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் தங்களது கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

பீகாரில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் இம்மாதம் 28ம் தேதி தொடங்கி மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. பீகார் சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை, பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மகா கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீகாரில் மோடி, ராகுல் காந்தி… தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கும் அரசியல் கட்சிகள்…
பிரதமர் மோடி

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் பெரும்பாலான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டன. மேலும், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தங்களது நட்சத்திர பேச்சாளர்களை களமிறக்கி வருகிறது. பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும் பீகாரில் தங்களது மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

பீகாரில் மோடி, ராகுல் காந்தி… தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கும் அரசியல் கட்சிகள்…
ராகுல் காந்தி

பிரதமர் மோடி வரும் 22ம் தேதி பீகாரில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 3ம் கட்டங்களில் பிரச்சாரம் செய்வார் என அந்த கட்சியின் பீகார் பொறுப்பாளர் சக்திசிங் கோஹில் தெரிவித்தார். கட்சிகளின் முக்கிய தலைகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதால் அங்கு தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.