Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் முதுமை நீக்கி இளமை தரும் பிளம்ஸ்!

முதுமை நீக்கி இளமை தரும் பிளம்ஸ்!

பிளம்ஸ்… ஆப்பிள், செவ்வாழை, மாதுளை, இலந்தை, செர்ரி போன்ற சிவப்பு நிறப் பழங்கள் வரிசையில் இது முக்கியமான பழம். இனிப்பு மற்றும் புளிப்புச்சுவையுடன் காணப்படும் இது மலைப்பகுதிகளில் அதிகமாக விளையக்கூடிய பழங்களில் ஒன்று. சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பாகவும் பார்க்க அழகாகவும் காணப்படும் இந்தப் பழத்தில் பெரும்பாலும் சிவப்பு நிறப் பழங்கள் உடலுக்கு ஊக்கமும் உற்சாகமும் தரக்கூடியவை.

முதுமை நீக்கி இளமை தரும் பிளம்ஸ்!

முதுமை நீக்கி இளமை தரும் பிளம்ஸ்!
மலச்சிக்கல்:
பொட்டாசியம், ஃபுளோரைடு, இரும்பு போன்ற தாது உப்புகள் அதிகமாக உள்ள பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் கே குறைவாக இருந்தாலும், இது ரத்தம் உறைதலுக்கு உதவக்கூடியது. ரத்தத்தை விருத்தி செய்யும்; ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும். ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருள்களைக் கரைக்கும். சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து, மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். மனஅழுத்தத்தைப் போக்கி டென்ஷனைக் குறைக்கும்.

கண்பார்வையைத் தெளிவுறச் செய்யும் சக்தி பிளம்ஸுக்கு உண்டு. எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துகள் இருப்பதால், மலச்சிக்கல் குறைபாட்டைச் சரிசெய்யும். மிகச் சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும் பிளம்ஸ் நோய்த்தொற்றுகளில் இருந்து காக்கும். இதில் வைட்டமின் சி-யின் பங்கு மகத்தானது. வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சத்துகள் பிளம்ஸ் பழத்தில் உள்ளன. ஆகவே, பார்வைத்திறனுக்கு உதவும். சளித்தொல்லையை தவிர்க்கச் செய்யும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்களில் இருந்து காக்கும் ஆற்றலும் வைட்டமின் ஏ-வுக்கு உள்ளது. அது பிளம்ஸில் அதிகம்.

முதுமை நீக்கி இளமை தரும் பிளம்ஸ்!
புற்றுநோய்:
பிளம்ஸ் பழங்களைத் தோலுடன் சுவைத்துச் சாப்பிடலாம். சிவப்பு நிறத்துடன் இருப்பதால், இது இதயத்துக்கு சிறந்த டானிக்காகச் செயல்படும். மேலும் முதுமைத் தோற்றத்துடன் காட்சியளிப்பவர்கள் பிளம்ஸ் பழங்களைச் சாப்பிட்டுவந்தால், நல்ல புத்துணர்ச்சியைப் பெற முடியும்; இளமைத் தோற்றத்தையும் தக்கவைத்துக்கொள்ளலாம். பிளம்ஸ் பழத்தின் சதைகளை மட்டும் தனியாக எடுத்து, நிழலில் உலர்த்தி, தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். இதிலுள்ள `எபிக்கேட்சின்’ என்ற மூலக்கூறு வீரியமிக்க புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். இது, கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கும்.

பிளம்சில் உள்ள குளோரோஜெனிக், நியோகுளோரோஜெனிக் போன்ற பீனால்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், ஃபிளேவனாய்டுகள் இருப்பதால் அவை மார்பகப்புற்று நோய் செல்களை அழிக்கும். பிளம்ஸில் ஃபிளேவனாய்டுகள் இருப்பதால், எலும்புத் திசுக்கள் சிதைவுறாமல் தடுக்கும்; அதனால், இது ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்படாமல் தடுக்கும். இந்தப் பழத்தில் உள்ள வைட்டமின்கள் ஏ, சி, கே ஆகியவை குழந்தைகளின் செல் உருவாக்கத்துக்கும் கண் பார்வைக்கோளாறுகளைச் சரிசெய்யவும் உதவுகின்றன. இது, எலும்புகளுக்குப் பலம் தருவதுடன் நோய் எதிர்ப்புச் சக்தி தருகிறது.

முதுமை நீக்கி இளமை தரும் பிளம்ஸ்!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சேகர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

டிக்டாக் பிரபலம் திவ்யா சைபர் க்ரைம் போலீசாரால் கைது!

தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை கைது செய்த தேனி சைபர் க்ரைம் போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு

சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களை பூட்டி சீல் வைக்கும் பண்யில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்...

கே.சி. வீரமணி வீட்டிலிருந்து 623 சவரன், 9 சொகுசு கார்கள் பறிமுதல்

முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி வீரமணி வீட்டிலும் அவரது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரின் 28 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்
TopTamilNews