darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



உணர்வுப்பூர்வமாக காதலித்தால் கிடைக்கும் இன்பம்...விருப்பமின்றி காதலிப்பதால் ஏற்படும் துயரம்...

Couple
Couple

வாழ்க்கையில் மகிழ்ச்சியை தரும் காதல் உணர்வு சிலருக்கு கசப்பான அனுபவமாக அமைந்து விடுவதற்கு அவர்கள் காதலை வேறுவிதமாக கையாள்வதே காரணமாக கூறப்படுகிறது.

காதலால் கிடைக்கும் மகிழ்ச்சி எப்படி காதலிக்கிறோம் என்பதை பொறுத்துதான் அமைகிறது. பலரின் துன்பங்களுக்கு காரணம் காதல் என்றே ஆணித்தரமாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் காதலிக்கும் நபரோ அல்லது காதலிக்கும் முறையோ அவர்களுக்கு மகிழ்ச்சியை தருதில்லை.

Couple

தனியாக இருப்பது போரடிப்பதாலேயோ அல்லது பயமாக இருப்பதாலேயோ கூட சிலர் காதலிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. கட்டாயத்தால் ஏற்படும் காதல் ஒருபோதும் மகிழ்ச்சியைத் தராது. இல்லை என்று சமாதானம் செய்து கொண்டாலும் சூழ்நிலைக்காகத்தான் காதலிக்கிறீர்கள் என்பதை அறிகுறிகள் காட்டிக்கொடுத்துவிடும்.

உங்கள் துணையைப் பற்றி தொடர்ந்து மற்றவர்களிடம் புகார் செய்து கொண்டு இருந்தால் நீங்கள் உங்கள் காதலில் மகிழ்ச்சியாக இல்லை என அர்த்தம் ஆகிறது. அவர்களின் பழக்கவழக்கங்கள் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலோ அவர்களுடன் இருப்பது அசௌகரியமாக உணர்ந்தாலோ உங்கள் காதலைத் தொடர விரும்புவதில்லை என்பது தெளிவாகிறது. ஒருவரை உண்மையாக நேசித்தால் அவர்களின் எந்த பழக்கமும் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தாது.

Couple

உங்கள் காதலை முறித்துக் கொண்டால் என்ன நடக்கும் என்று சிந்திக்கும்போது மனதில் முதலில் தோன்றுவது என்ன? தனியாக இருக்க போகிறோம் என்ற பயமா அல்லது சுதந்திரமாக இருக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியா?. முதல் எண்ணம் தலைதூக்கினால் நீங்கள் தனியாக இருப்பதற்கு பயந்துதான் இந்த உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தமாகிறது.

Couple

காதலில் இருக்கும்போது உங்கள் துணையை அப்படியே ஏற்றுக்கொள்வீர்கள், ஆனால் உங்கள் துணையின் நடவடிக்கையை தொடர்ந்து மாற்ற முயற்சித்தால் அது இயல்பானது அல்ல. நீங்கள் இதைச் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் அவர்களை விரும்பவில்லை என்று அர்த்தம். இவ்வாறு இருந்தால் அவர்களை மாற்றுவதற்கு பதிலாக அவர்கள் மீதான உங்கள் கண்ணோட்டத்தை மாற்ற முயலுங்கள்.

2018 TopTamilNews. All rights reserved.