`மருந்தில்லை, கவனிக்க ஆளில்லை; எதுக்கு எங்களை உயிரோடு சாகடிக்கிறீங்க, சிஎம் சார்!’- கொரோனாவால் பாதித்த சென்னைப் பெண் கண்ணீர்

 

`மருந்தில்லை, கவனிக்க ஆளில்லை; எதுக்கு எங்களை உயிரோடு சாகடிக்கிறீங்க, சிஎம் சார்!’- கொரோனாவால் பாதித்த சென்னைப் பெண் கண்ணீர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை பெண், மருந்து இல்லாமல் வீட்டிலேயே தவித்து வருகிறார். மெடிக்கல் கடையிலும் மருந்து கொடுக்க மறுக்கிறார்கள். கணவர், மாமியாரை அழைத்துச் சென்றுவிட்டார்கள். வீட்டில் தனிமையில் தவித்து வருகிறேன். எனக்கு உதவுங்கள் என்று கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பெண்.

`மருந்தில்லை, கவனிக்க ஆளில்லை; எதுக்கு எங்களை உயிரோடு சாகடிக்கிறீங்க, சிஎம் சார்!’- கொரோனாவால் பாதித்த சென்னைப் பெண் கண்ணீர்

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. சாதாரண காய்ச்சலுக்கு மெடிக்கல் கடகளில் மருந்து கொடுக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால், காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்கள் கொரோனா வந்துவிட்டதோ என்ற பீதியில் இருக்கின்றனர். இந்த நிலையில், வெளியே செல்லாத சென்னை பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் தனக்கு மெடிக்கலில் மருந்து கொடுக்க மறுக்கிறார்கள் என்றும் சிகிச்சை அளிக்க அரசு தரப்பில் யாரும் வரவில்லை என்றும் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அந்த பெண் பேசுகையில், “வணக்கம் சிஎம் சார். என்னுடைய பெயர் ரஜினி ப்ரியா, அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள பாடியில் இருந்து நான் பேசுகிறேன். எல்லோரும் பார்த்து பயப்படுகிற கொரோனா நோயாளி நான். 4 நாள்களுக்கு முன்பு ஜலதோஷத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன். தொண்டை வலி இருந்தது. கொரோனா தொற்றா இருக்குமோ என்று பயந்து தனியார் பரிசோதனை மையத்தில் சோதனை செய்தேன். நேற்று மாலை எனக்கு கொரோனா பாசிடிட் என்று ரிசல்ட் வந்துவிட்டது. இரண்டு நாட்களாக வீட்டில் எமர்ஜென்சிக்காக வைத்திருந்த மாத்திரையை சாப்பிட்டேன். அதன்பிறகு மெடிக்கல் கடைக்கு சென்று மருந்து கேட்டேன். அரசு விதிப்படி கொடுக்க முடியாது என்று கூறிவிட்டனர். அதன்பிறகு அரசு சார்பில் சிகிச்சை அளிப்பார்கள் என்று வீட்டில் வெயிட் பண்ணினேன். பரிசோதனை முடிவை வாட்ஸ் அப்பில் அனுப்பினாங்க.

`மருந்தில்லை, கவனிக்க ஆளில்லை; எதுக்கு எங்களை உயிரோடு சாகடிக்கிறீங்க, சிஎம் சார்!’- கொரோனாவால் பாதித்த சென்னைப் பெண் கண்ணீர்

இந்த ரிப்போர்ட் ஒன்று ஐசிஎம்ஆருக்கு போகும், ஒரு ரிப்போர்ட் மாநகராட்சிக்கு போகும் என்று சொன்னார்கள். இதனால் எந்த மருந்தும் சாப்பிடாமல் நான் காத்திருந்தேன். என்னால் மாத்திரை எடுக்க முடியவில்லை. அதுதான் உண்மை. எனக்கு கடுமையான தலைவலி இருக்கிறது. நீங்க என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. எனக்கு மருந்து கொடுக்க இதுவரைக்கும் ஒரு போன் கால் கூட அரசு தரப்பில் இருந்தும், மாநகராட்சி தரப்பில் இருந்தும் வரவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் அரசு செய்த நடவடிக்கைகளை வரவேற்று வீடியோ போட்டேன். ஆனால், மே, ஜுன் மாதத்தில் எனக்கு பயம் வந்தது. நான் வீட்டில்தான் இருக்கிறேன். எங்கும் போகவில்லை. அரசு விதியை கடமைப்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். கொரோனா எனக்கு எப்படி வந்ததுகூட தெரியவில்லை. நேற்று இரவு என்னால் மூச்சுவிட முடியவில்லை. மாத்திரை வீட்டில் இல்லை. மெடிக்கல் போனால் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். நான் எப்படி தூங்குவேன். வலியோட தூங்க முடியாமல் இரவு முழுவதும் கஷ்டப்படுகிறேன்.

`மருந்தில்லை, கவனிக்க ஆளில்லை; எதுக்கு எங்களை உயிரோடு சாகடிக்கிறீங்க, சிஎம் சார்!’- கொரோனாவால் பாதித்த சென்னைப் பெண் கண்ணீர்

தினந்தோறும் விசிட் வருகிற பெண் சுகாதாரத்துறை ஊழியரிடம் தெரிவித்தேன். அவர்களாவது மாத்திரை தருவார்கள் என்று பார்த்தேன். அவர்களை தரவில்லை. எனது கணவரையும், மாமியாரையும் காலையில கூட்டிட்டு போனாங்க. மாலை ஆகிவிட்டது. அவர்களையும் அனுப்பவில்லை. எனக்கு சாப்பாடு கொடுக்ககூட ஆளில்லை. மருந்து கொடுக்கவும் யாரும் இல்லை. நான் தனியாக கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். வீட்டில் இருக்கிற எனக்கு இந்த நிலைமை என்றால் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனால் என்ன நிலைமை என்று எனக்கு புரிஞ்சுப்போச்சு. ஆஸ்பத்திரிக்கு என்னை கூட்டிட்டுப்போங்கன்னு நான் சொல்லவில்லை. எனக்கு மெடிக்கல் கடையிலாவது மருந்து வாங்க அனுமதி கொடுங்க. சென்னையில் ஏன் பாதிப்பும் இறப்பும் அதிகமாச்சின்னு எனக்கு புரியவில்லை. குழம்பி போய் இருந்தேன். இன்றைக்கு நான் கஷ்டப்படும்போதுதான் தெரிகிறது இதனால்தான் சென்னையில் இப்படி பாதிப்பு அதிகமாச்சின்னு. என்னுடைய கணவருக்கும், மாமியாருக்கும் கொரோனா வந்தால் அரசுதான் காரணம். கண்டிப்பாக நான் உங்களைத்தான் சொல்லுவேன்.

`மருந்தில்லை, கவனிக்க ஆளில்லை; எதுக்கு எங்களை உயிரோடு சாகடிக்கிறீங்க, சிஎம் சார்!’- கொரோனாவால் பாதித்த சென்னைப் பெண் கண்ணீர்

எனக்கு வலி தாங்க முடியவில்லை. மருந்து கொடுக்க முடியவில்லை என்றால் மருந்து கடையில் கொடுக்க அனுமதியுங்கள். இத்தனை வருடங்களாக நாங்கள் மருந்து சாப்பிட்டு கொண்டு வாழ்கிறோம். இனியும் அப்படியே வாழ்கிறோம். எதுக்கு எங்களை உயிரிரோடு சாகடிக்கிறீங்க. இது யாரோட அஜாக்கிரதை என்று எனக்கு தெரியவில்லை. நான் காத்திருந்து காத்திருந்து முடியாமல்தான் இந்த வீடியோவை எடுக்கிறேன். இது சிஎம்-யோட பார்வைக்கு போகும் வரையில் ரீச் ஆகணும். யார் எப்படி கொண்டு போய் சேர்ப்பீங்கன்னு எனக்கு தெரியவில்லை. ப்ளீஸ் தயவு செய்து இதை ஷேர் பண்ணுங்க. என்னை மாதிரி யாரும் கஷ்டப்படக் கூடாது. இதனால்தான் சென்னையில் பாதிப்பு அதிகமாச்சின்று இப்போது தெரிந்துபோச்சி. தயது செய்து இந்த மாதிரி யாருக்கும் கேர் கொடுக்காம விடாதீங்க. ஒவ்வொரு உயிரும் அவ்வளவு முக்கியம்” என்று கண்ணீர் மல்க தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் ரஜினி ப்ரியாவில் கண்ணீரை கண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேகர்பாபு எம்எல்ஏவிடம் அந்த பெண்ணிற்கு உடனடியாக உதவும் படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து, சென்னை – பாடி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அரசு உதவி கிடைக்காமல் தவித்த ரஜினி ப்ரியாவுக்கு, மருந்து, கபசுர நீர் உள்ளிட்ட உதவிகள் வழங்கினார்!