‘ஒரே நாடு ஒரே அறநிலையத்துறை’ பாஜக நிர்வாகி உச்சநீதிமன்றத்தில் மனு

 

‘ஒரே நாடு ஒரே அறநிலையத்துறை’ பாஜக நிர்வாகி உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட்டு கோவில் சொத்துக்களை பராமரிப்பதை அந்த நிர்வாகங்கள் இடமே கொடுத்துவிட வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

‘ஒரே நாடு ஒரே அறநிலையத்துறை’ பாஜக நிர்வாகி உச்சநீதிமன்றத்தில் மனு

அந்த மனுவில், ஒரே நாடு ஒரே அறநிலைத்துறை கோரிக்கையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமியர்கள்கிறிஸ்தவர்களை போலவே இந்துக்களும் சீக்கியர்களும் வழிபாட்டு தளங்களை உருவாக்கவும் பராமரிக்கவும் உரிமைகளை வழங்க வேண்டுமெனவும் மனுவில் அஸ்வினி உபாத்யாயா கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவில் நிர்வாகத்தினை மாநில அரசுகள் மேற்கொள்வது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றதுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.முன்னதாக, கோவில் நிலங்களை பாதுகாப்பதில் மாநில அரசு அஜாக்கிரதையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கோவில் நிலங்களை மீட்க அறநிலையத் துறை உரிய வழிமுறைகளை மேற்கொள்ளவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் பாஜக வழக்கறிஞர் இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.