பிஎம் கேர்ஸ் கணக்கில் எவ்வளவு நிதி கிடைத்தது என்பதை தர மறுத்த மத்திய அரசு மீது வழக்குப்பதிவு!

 

பிஎம் கேர்ஸ் கணக்கில் எவ்வளவு நிதி கிடைத்தது என்பதை தர மறுத்த மத்திய அரசு மீது வழக்குப்பதிவு!

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க நிதி உதவி அளிக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்ததின் பேரில், பி.எம்.கேர்ஸ் எனப்படும் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், நடிகர்கள் என பலரும் நிதிஉதவி அளித்து வருகின்றனர். பிரதமர் நிவாரண நிதி PMNRF இருக்கும்போது இப்போ புதுசா எதுக்கு PM CARES ? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் வழக்கறிஞர் அபய் குப்தா என்பவர், பிஎம் கேர் நிதி குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரியிருந்தார். பிஎம் கேர் நிதிக்கு இதுவரை எவ்வளவு தொகை வந்துள்ளது? அதில் இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்தபிரதமர் அலுவலகம், பி.எம்.கேர் நிதி அமைப்பு அல்ல என்றும், எனவே அதுகுறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என்றும், எனினும் அதற்கான இணையதளத்தில் சென்று விவரங்களை அறியலாம் என்றும் தெரிவித்துள்ளது.

பிஎம் கேர்ஸ் கணக்கில் எவ்வளவு நிதி கிடைத்தது என்பதை தர மறுத்த மத்திய அரசு மீது வழக்குப்பதிவு!

கொரோனாவை சமாளிக்க PM cares கணக்கில் எவ்வளவு நிதி உதவி கிடைத்தது, எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தர மத்திய அரசு மறுத்திருந்தத நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பொதுமக்களுக்கு உதவி செய்ய உருவாக்கப்பட்ட பி.எம் கேர்ஸ் நிதியை பொது நல அறக்கட்டளையாக அறிவிக்க வேண்டும் என்று பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.