நொறுக்குத்தீனி விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்குத் தடை!

 

நொறுக்குத்தீனி விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்குத் தடை!

சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த தடை விதித்து டந்த 2018ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை உத்தரவிட்டது. அதன் படி பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 14 பொருட்களுக்கு தடை விதித்த இந்த உத்தரவு, கடந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு பிளாஸ்டிக் பேக், தண்ணீர் பாக்கெட், டீ கப் உள்ளிட்ட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும் அரசு தடை விதித்தது.

நொறுக்குத்தீனி விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்குத் தடை!

ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்ததால், தடையை நீக்க வலியுறுத்தி பிளாஸ்டிக் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. கடந்த ஜூலை மாதம் அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை ஆணை செல்லும் என்றும் விலக்களிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் தடை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதனையடுத்து, பிளாஸ்டிக் தடை குறித்த அரசாணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், நொறுக்குத்தீனிஅடைத்து விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.