’பிளாஸ்மா சிகிச்சை என்பது…’ உலக சுகாதார மைய விஞ்ஞானியின் முக்கிய கருத்து

 

’பிளாஸ்மா சிகிச்சை என்பது…’  உலக சுகாதார மைய விஞ்ஞானியின் முக்கிய கருத்து

கொரோனா நோய்த் தொற்று உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி உலகளவில் 2 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அடுத்த 15 நாள்களில் அதன் எண்ணிக்கை 38 லட்சம் அதிகரித்திருக்கிறது.

’பிளாஸ்மா சிகிச்சை என்பது…’  உலக சுகாதார மைய விஞ்ஞானியின் முக்கிய கருத்து

நியூசிலாந்து நாட்டில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. நவம்பரில் அமெரிக்காவில் தேர்தல் எனும் நிலையில் எப்படி அது கொரோனாவை எதிர்கொள்ள விருக்கிறது என்பது கவலைக்குரியதாகவே இருக்கிறது.

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதாவது ஏற்கெனவே கொரோனாவிலிருந்து நலம்பெற்றவர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மாவைக் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சை.

ஆனால், இதுகுறித்து உலக சுகாதார மையத்தின் மூத்த விஞ்ஞானி செளம்யா சுவாமிநாதன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

’பிளாஸ்மா சிகிச்சை என்பது…’  உலக சுகாதார மைய விஞ்ஞானியின் முக்கிய கருத்து

“கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சை தொடர்ந்து பரிசோதனையில் இருக்கிறது. அந்தச் சிகிச்சையால் நல்ல பலன் கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது.

ஏற்கெனவே இதுபோன்ற தொற்றுநோய் பரவிய நேரங்களில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் வெற்றியும் கிடைத்துள்ளது. அதனால், இந்தச் சிகிச்சை முறையை பரிசோதனைக்கு உட்படுத்தி தொடர்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும்’ என்பது உள்பட பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.