தமிழாய்வு நிறுவனத்தை முடக்க முயற்சி! – டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

 

தமிழாய்வு நிறுவனத்தை முடக்க முயற்சி! – டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநராக உதவிப் பேராசிரியர் நிலையில் உள்ளவரை நியமித்திருப்பது தமிழாய்வு நிறுவனத்தை முடக்க வழிவகுக்கும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழாய்வு நிறுவனத்தை முடக்க முயற்சி! – டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு
டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக உதவிப் பேராசிரியர் நிலையிலுள்ள ஒருவர் அயல்பணி முறையில் நியமிக்கப்பட்டிருப்பது போதுமானது அல்ல. இது செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் தமிழாராய்ச்சியை ஊக்குவிக்க எந்த வகையிலும் உதவாது!


செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மத்திய பல்கலைக்கழகத்திற்கு இணையான அமைப்பு ஆகும். அதன் இயக்குநராகத் தமிழாராய்ச்சியில் அனுபவம் மிக்க தமிழறிஞர்களில் ஒருவரை நியமிப்பது தான் பொருத்தமாக இருக்கும். தற்போதைய நியமனம் தமிழாய்வு நிறுவனத்தை மேலும் முடக்குவதற்கு வழி வகுக்கும்!” என்று கூறியுள்ளார்.