புதிய கல்விக் கொள்கையை ஏற்க திட்டமா? – ஒரு மாதம் ஆகியும் நிபுணர் குழுவை அமைக்காதது பற்றி கல்வியாளர்கள் சந்தேகம்!

புதிய கல்விக் கொள்கையை ஏற்க திட்டமா? – ஒரு மாதம் ஆகியும் நிபுணர் குழுவை அமைக்காதது பற்றி கல்வியாளர்கள் சந்தேகம்!

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வகையில் அதை ஆராய நிபுணர் குழுவை அமைக்காமல் தமிழக அரசு தாமதம் செய்துவருவதாக கல்வியாளர்கள் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்க திட்டமா? – ஒரு மாதம் ஆகியும் நிபுணர் குழுவை அமைக்காதது பற்றி கல்வியாளர்கள் சந்தேகம்!

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை வரைவைக் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இதற்கு தமிழ்நாட்டில் தொடங்கி நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து இது வரைவுதான், மக்கள் கருத்து தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. அப்படி என்ன என்ன மாற்றம் செய்யப்பட்டது என்ற எந்த அறிவிப்பும் இன்றி, கடந்த மாதம் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.

புதிய கல்விக் கொள்கையை ஏற்க திட்டமா? – ஒரு மாதம் ஆகியும் நிபுணர் குழுவை அமைக்காதது பற்றி கல்வியாளர்கள் சந்தேகம்!

தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காது என்று அறிவித்தது. புதிய கல்விக் கொள்கை பற்றி ஆராய பள்ளிக் கல்வி அளவிலும் உயர் கல்வி அளவிலும் தனித்தனியாகக் கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் ஆக உள்ள நிலையில் குழு விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர்கள் பேட்டி மட்டுமே அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரசின் நிலைப்பாடு சந்தேகத்தை கிளப்புவதாக கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக மக்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பை குறைக்க ஒத்திப்போடும்

புதிய கல்விக் கொள்கையை ஏற்க திட்டமா? – ஒரு மாதம் ஆகியும் நிபுணர் குழுவை அமைக்காதது பற்றி கல்வியாளர்கள் சந்தேகம்!

முயற்சியைத் தமிழக அரசு எடுத்து வருகிறதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழக அரசு கல்வியாளர்கள் குழுவை உடனடியாக அமைத்து, புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கத் தலைவர் தியாகராஜன், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாட்ரிக் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.